siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 7 ஜூலை, 2021

சேருநுவர பொலிஸ் பிரில் தாதியர் ஒருவர் தீ மூட்டி தற்கொலை முயற்சி

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் 06-07-2021.அன்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் ஈச்சிலம்பற்று கொரோனா இடைத்தங்கல் முகாமில் கடமையாற்றி வந்த சேருநுவர பகுதியைச் சேர்ந்த தாதியர் என 
தெரிவிக்கப்படுகின்றது.
கணவர் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்ற நிலையில், தீ மூட்டிக் கொண்ட தாதிய உத்தியோகத்தர் தற்பொழுது ஈச்சிலம்பற்று கொரோனா இடைத்தங்கல் முகாமில் கடமையாற்றி வருவதாகவும் குடும்பத்தகராறு காரணமாகவே தனக்குத் தானே தீ மூட்டி கொண்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம்
 தெரியவந்துள்ளது.
குறித்த தாதிய உத்தியோகத்தர் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 
தெரியவருகின்றது.
தீ மூட்டியமைக்கான காரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சேருநுவர பொலிஸார்
 தெரிவிக்கின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக