தரம் 1 முதல் 13 வரையான மாணவர்களுக்காக அரசாங்கம் 20 தொலைக்காட்சி அலைவரிசைகளை நிறுவத் திட்டமிட்டுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளரும் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக் கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
பாடசாலை மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் இலவசக் கல்வியை வழங்கவும் அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது என அவர் கூறினார்.
இதன்படி உயர்தரத்தில் தொழில்நுட்பம்,உயிரியல், கணிதம் மற்றும் கலை ஆகிய துறைகளுக்கு 4 தனித்தனி அலைவரிசைகள் நிறுவப்படும் எனவும் பாடத்திட்டத்தின் பதிவு தற்போது கல்வி அமைச்சில் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக