siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 4 ஜூலை, 2021

துவிச்சக்கரவண்டியில் சென்றவரைஅம்பாறையில் லொறி மோதி பலி

அம்பாறை – அட்டாளைச்சேனை பகுதியில் வீதியால் துவிச்சக்கரவண்டியில் சென்ற ஒருவர் லொறி மோதி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் 03-.'7-2021-சனிக்கிழமைஅன்று மதியம் அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள பிரதான வீதியில் 
இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவமானது வீதி திருத்த வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த மண்லொறி பிரதான வீதியினால் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னால் துவிச்சக்கரவண்டியில் சென்ற நபரை மோதி தப்பிச் சென்றுள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தின் சிசிடிவி காட்சியும் தற்போது பெறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி சென்ற சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக