siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 11 ஜூலை, 2026

அமரர் திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா) நான்காம் ஆண்டு நினைவஞ்சலி,12 07.26

மலர்வு-02-05.1942-உதிர்வு-26-06-2022.- 
திதி 12-07-2026-,ஞாயிருக்கிழமை  அன்று
 யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகக்கொண்டிருந்த  திருமதி ஆ .க.சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்களின்
நான்காம் ஆண்டு நினைவஞ்சலி 12-07-2026.அன்று  அன்னார் காலம்சென்ற 
 திரு.ஆ .க . சுப்பிரமணியம்(மணிஐயா)
 அவர்களின் பாசமிகு மனைவியாரும்  காலம் சென்றவர்களான  தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும் 
காலம்சென்றவர்களான ஆறுமுகம் கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும் 
காலம்சென்றவர்களான  துரைராஜா செல்வராஜா ஞானமணி வித்திலமணி ஜெயரத்தினம்  
பாலசிங்கம் மற்றும் சிவலிங்கமணி ஆகியோரின் அன்புச்சகோதரியும் தர்மசிறி (இலங்கை )தர்மபூபதி (சுவிஸ் )தர்மதேவி((ஜேர்மன் ) தர்மதேவன்(கனடா )
 தர்மசாந்தினி (நோர்வே )காலம்சென்ற தர்மகுமார் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்
12-07-2026-,ஞாயிருக்கிழமை   அன்று  பிற்பகல்,12,மணிஅளவில்  அன்னாரின் பிள்ளைகளின்  இல்லங்களில்  அன்னாரின்  ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்  தொடர்ந்து நடைபெறும் 
அழைப்பிதழ்கிடைத்தவர்களுக்கு   மதியபோசன நிகழ்விலும்  கலந்து கொள்ளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள்>>>
நான்காம் ஆண்டு நினைவஞ்சலி
       அன்பும் அறனுமாய் இருந்து 
           எங்களை விட்டுப்பிரிந்தாய்
       உன் நினைவுகளே எங்களுக்கு 
           வழிகாட்டும் ஒளிவிளக்கு
காலச்சுழற்சியில் இரண்டு  கடந்து போனாலும் இன்னும் 
எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
எங்கள் அம்மா   
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

 என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் ,பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் புட்டப் பிள்ளைகள்  
சகோதர்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இணைந்து அன்னாரை நினைவு கூருகின்றார்கள்
அன்னாரின்  ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவற்கிரி .கொம் நவக்கிரி.கொம் ,நிலாவரை கொம்.இணையங்களும் உறவினர்கள்  நவற்கிரி சுவிஸ் ஜெர்மன் கனடா நோர்வே   நண்பர்களும் 
இறை வனைபிராத்திக் கின்றனர் .
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி
.இங்கனம் -
குடும்பத்தினர்.

https://navakkiri.blogspot.com/2024/07/03-0724.html




0 கருத்துகள்:

கருத்துரையிடுக