தோற்றம் -07-12-1955-மறைவு-19.08.2022 -நான்காம் ஆண்டு திதி 04-09-2026-அன்று
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்(யாழில் பலபாகங்களுக்கு வீடுகளுக்கு மின்இணைப்பையும் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் மின் மோட்டர் திருத்த வேலைகளின் நவற்கிரியில் பிரசித்தி பெற்ற முதல்வரான ) திரு ஐயம்பிள்ளை சந்திரசேகரம்
( சந்திரன் ) அவர்களின் .நான்காம் ஆண்டு திதி 04-09-2026வெள்ளிக்கிழமை அன்று
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான துரைராஜா சிதம்பரம்(பூரணம் ) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்
திருமதி சந்திரசேகரம் கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்
சந்திரசேகரம் பண்ணீர்தாஸ் ((பண்ணீர்)(பிரான்ஸ் )காலஞ்சென்ற சுகதீபா(தீபா) மற்றும் டர்சிகா (லண்டன்) (தரிசி)ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுகந்தினி (பிரான்ஸ் ) மற்றும் அமரர் சுரேஸ்குமார் மற்றும் செல்வகுமரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாசமிகுமாமனாரும்
கவிஷன் தஸ்மிகா அஸ்விகா செல்வி பண்ணீர்தாஸ் ஆகியோரின்
பாசமிகு பேரனும் காலஞ்சென்ற பத்மவதி காலஞ்சென்ற கந்தசாமி )மற்றும் ராசரத்தினம்(ரத்தி) (கனடா )
(கனடா ) அமரர் சண்முகம் மற்றும்திருமதி நல்லம்மா (அருந்தவம்)(கனடா ) சுப்பையா (ஞானன்- இலங்கை) பாக்கியம் (பாக்கி இலங்கை) அகியோரின் அன்புச்சகோதனும்
காலஞ்சென்ற தங்கரத்தினம் (தங்காள் )மற்றும் பாலையா ( ஓய்வு பெற்ற யாழ் போதனா வையித்தியசாலை ஊழியர் )காலஞ்சென்ற இரத்தினம்(சின்னம்மான்-சின்னண்ணை ககேசன்துறை சீமெந்து தொழில் சாலை முன்னாள் ஊழியர் ) சரஸ்வதி/(கனடா ) தியாகராஜா(தேவன்-ராஜா சுவிஸ் ) இராசேஸ்வரி (கனடா) சின்னவட்டன் (இலங்கை) கணேசலிங்கம் (கனடா ) சந்திரன் (குட்டி ஜேர்மனி )ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள்
நான்காம் ஆண்டு நினைவஞ்சலி
அன்பும் அறனுமாய் இருந்து
எங்களை விட்டுப்பிரிந்தாய்
உன் நினைவுகளே எங்களுக்கு
வழிகாட்டும் ஒளிவிளக்கு
காலங்கள் பல கடந்தாலும்,கண்ணை விட்டு மறைந்தாலும்,இதயத்தின் ஓரத்தில் ஒளிந்திருக்கும்
நீங்காத நினைவுகள் அவை!
ஆனாலும் என்ன
நீங்காத நினைவுகள்
நிஜமாக நிறைந்திருக்கும்
காலங்கள் பிரிவின்
காயத்தை ஆற்றலாம்
பிரிவின் வலிகள்
என்றும்பிரிந்திடாமல்
எம் முடன்
உடலும் உயிரும்மறையலாம்
உங்கள் அன்பு என்றும் மறையாது
பூவில் உறையும் தேனினை போல
எங்கள் உள்ளமதில்
உங்கள் நினைவுகளாய்
வாழும் காலங்களில்
பாசத் தந்தையாக
பொறுப்புள்ள தலைமகனாக
பண்பு மிகு சேவையாளனாக
வாழ்ந்து மறைந்தீர்கள்
வீசும் காற்றிலும்
மலரின் மணத்திலும்
எம்முடன் நீங்கள்
கலந்திருப்பதாக எண்ணி வாழ்கிறோம்!
– நீங்கள்
இல்லையெனும் உணர்வே
நெஞ்சுருகி கொல்லுதப்பா!
இருந்தாலும் என்றென்றும் எங்களுக்கு
இறைவன் நீங்கள் தான் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும் பிரார்த்திக்கும் அன்பு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,நவற்கிரி வாழ்மக்கள் உற்றார், உறவினர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
. எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! சாந்தி !!! சாந்தி !!!
https://navakkiri.blogspot.com/2023/09/1-070923.html









0 கருத்துகள்:
கருத்துரையிடுக