siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 24 மார்ச், 2024

தென் அமெரிக்க பிரேசில் நாட்டை தாக்கிய புயல் பத்து பேர் பலி

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் கடுமையான புயல் தாக்கியது. குறிப்பாக ரியோ டி ஜெனிரோவின் மலைப்பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. 
புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
 பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து 
நடைபெற்று வருகிறது.
புயல் மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 
வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கடந்த சில தினங்களாக 
கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதிகபட்சமாக 62 டிகிரி செல்சியஸ்
 வெப்பம் பதிவானது. 
இந்த வெப்ப அலையைத் தொடர்ந்து திடீரென புயல் தாக்கியிருக்கிறது. காலநிலை மாற்றத்தால் இந்த வானிலை மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது .


சனி, 23 மார்ச், 2024

நாட்டில் அஸ்கிரியவில் மாணவர்களின் தலையில் விழுந்த மின் விசிறி இருவர் காயம்.

நாட்டில் கண்டி, அஸ்கிரியவில் உள்ள பாடசாலையொன்றில், தரம் ஐந்து வகுப்பில் மின்விசிறி விழுந்ததால், காயமடைந்த மாணவர்கள் இருவர் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் இருவரும் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மாணவனுக்கு 
கண்ணிலும், மற்றைய மாணவனுக்கு தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே மின்விசிறி
 பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும், இது குறித்து பாடசாலை நிர்வாகத்திடம் தெரிவித்தும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


 


 

வெள்ளி, 22 மார்ச், 2024

கோலா பூடான் கடலில் விபத்துக்குள்ளான அகதிகள் படகு அறுவது பேர் மீட்பு

வங்காள தேசத்தில் வசித்து வரும் ஏராளமான அகதிகள் கடல் வழியாக இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு படகில் தப்பி செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இவர்கள் சட்டவிரோத மாக பாதுகாப்பு இல்லாமல் படகில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிர் இழந்து
 வருகின்றனர். 
இந்நிலையில் வங்காள தேசத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் படகில் இந்தோனேஷியா சென்று கொண்டிருந்தனர். 
இந்தோனேஷியா வடக்கில் கோலா பூடான் கடற்கரையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் படகு சென்று கொண்டிருந்த போது கடலில் திடீரென கவிழ்ந்தது.
இதனால் படகில் பயணம் செய்த அகதிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இது பற்றி அறிந்ததும் இந்தோனேஷியா கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 
கடலில் தத்தளித்த 60 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர். மற்றவர்கள் கதி என்ன? என்று தெரியவில்லை.அவர்களை கடலோர படையினர் தேடி வருகின்றனர்..என்பது குறிப்பிடத்தக்கது .





 

வியாழன், 21 மார்ச், 2024

நாட்டில் வைரவ புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவருக்கு நேர்ந்த கதி

நாட்டில்வவுனியா, வைரவ புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, வைரவ புளியங்குளம், ரயில் நிலைய வீதியில்.21-03-2024. இன்று மதியம் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
 வவுனியா நகரப்பகுதியில் ரயில் நிலைய வீதி ஊடாக சென்ற முச்சக்கரவண்டி கதிரேசு வீதியில் திரும்ப முற்பட்ட வேளையில் வைரவபுளியங்குளத்தில் இருந்து வவுனியா நகரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ள துடன், குறித்த விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  என்பது குறிப்பிடத்தக்கது  


புதன், 20 மார்ச், 2024

பஸ் விபத்துக்குள்ளானதில் சீனாவில் பதின்நான்கு பேர் உயிரிழப்பு

வட சீனாவின் ஷாங்சி மாகாணத்தில்  19-03-2024.அன்று மாலை, 51 பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் சென்று கொண்டிருந்தது. 
அந்த பஸ் ஹோஹோட் - பீஹாய் விரைவு சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் நுழைந்தது. அப்போது அந்த பஸ் டிரைவரின்
 கட்டுப்பாட்டை இழந்த பஸ் சுரங்கத்தின் தடுப்பு சுவர் மீது 
அதிபயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்க்கும்
 பணியில் ஈடுபட்டனர்.
 இந்த விபத்தில் படுகாயமடைந்த 37 பேரை மீட்பு குழுவினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது 

 


 

செவ்வாய், 19 மார்ச், 2024

அமெரிக்காவில் ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிட்ட எட்டு வயது சிறுவன் மரணம்

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் ஸ்ட்ராபெர்ரி பழம் அதிகமாக சாப்பிட்ட சிறுவன் மரணமடைந்த விவகாரத்தில் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த 8 வயது சிறுவன் பாடசாலையில் நிதி திரட்டும் பொருட்டு ஸ்ட்ராபெர்ரி பழங்களை அதிகமாக சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தூக்கத்தில் இருந்த சிறுவனை எழுப்பிய பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்த அந்த பெற்றோர், சிறுவன் ஒவ்வாமை அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவனுக்கு Benadryl அளித்துள்ளதாகவும், குளிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
எந்த மாற்றமும் தென்படாததுடன், நிலைமை மோசமடைய, இரவு 10.30 மணியளவில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு 
சென்றுள்ளனர். சில மணி நேரத்திற்கு பின்னர், வீடு 
திரும்பியுள்ளனர்.
இந்த நிலையிலேயே வெள்ளிக்கிழமை பகல் பாடசாலைக்கு அனுப்பும் பொருட்டு தூக்கத்தில் இருந்த சிறுவனை பெற்றோர் 
எழுப்பியுள்ளனர். 
சிறுவன் எழும்பாத்தால் மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களே சிறுவன் மரணமடைந்துள்ளதை உறுதி செய்துள்ளனர். 
 இந்த நிலையில் வெளியான உடற்கூறு ஆய்வில், சிறுவன் ஒவ்வாமை காரணமாகவே மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது





திங்கள், 18 மார்ச், 2024

நாட்டில் செட்டிகுளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் மரணம்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வீதியால் சென்றவரை யானை தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக செட்டிகுளம் பொலிசார் 
தெரிவித்தனர். 
செட்டிகுளம், மருதமடுப் பகுதியில் 17-03-2024.அன்று 
 மாலை வீதியால் பயணித்த முதியவர் ஒருவரை அப் பகுதிக்கு வந்த யானை தாக்கியுள்ளது. 
இதனால் படுகாயமடைந்த குறித்த முதியவர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். 
செட்டிகுளம், மருதமடுப் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய தனபாலகே அனுர தென்னக்கோன் என்பவரே மரணமடைந்தவராவார். 
இச் சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.






 

ஞாயிறு, 17 மார்ச், 2024

நாட்டில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

நாட்டில்மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்வத்த மற்றும் அம்பேபுஸ்ஸ நிலையங்களுக்கு இடையில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 
 கொழும்பில் இருந்து  16-03-2024.அன்று  காலை ரம்புக்னா நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். 
உயிரிழந்த நபர் 62 வயதுடையவர் எனவும், அவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் 
தெரிவிக்கின்றனர். 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





 

சனி, 16 மார்ச், 2024

ஒன்டாரியோவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய குடும்பத்தினர் உயிரிழப்பு

கனடாவின் ஒன்டாரியோவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் 
தெரிவிக்கின்றன. 
தீயை அணைத்த பிறகு மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. எவ்வாறாயினும், அவர்களின் அடையாளத்தை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 
குறித்த வீட்டிற்கு யாரேனும் தீவைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.






 

வெள்ளி, 15 மார்ச், 2024

கனடா ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட வர்களின் இறுதிச் சடங்கு நாளை

கனடா- ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பாஹிவனில் உள்ள வீட்டில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது
இலங்கையர்களின் இறுதிக்கிரியைகளை, ஒட்டாவா நகரில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் மேற்கொள்ள நடவடிக்கை
 எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , உயிரிழந்த ஆறு பேரின் இறுதிக் கிரியைகள் அவர்களின் உறவினர்களின் விருப்பப்படி மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
.என்பது குறிப்பிடத்தக்கது.




 

வியாழன், 14 மார்ச், 2024

மரண அறிவித்தல்அமரர் சிதம்பரப்பிள்ளை கந்தையா 14.03.2024

 துயர் பகிர்வு மலர்வு .02-10-1936-- உதிர்வு -14-03-2024
யாழ். பலாலியை பிறப்பிடமாகவும்  ஆவரங்கால் சந்தை வீதியை வதிவிடமாகவும் கொண்ட. 
அமரர்   சிதம்பரப்பிள்ளை கந்தையா 
        அவர்கள் .14-03-2024.இன்று  வியாழக்கிழமை. இறைபாதம் அடைந்தார்.  அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
அன்னார். காலஞ்சென்ற திரு திருமதி சிதம்பரப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும். 
செல்லம் அவர்களின் அன்புக்கணவரும். 
செல்வக்கந்தராணி,நல்லக்கந்தராணி,மாவைக்கந்தராணி,செந்தமிழ்கந்தராசா(லண்டன்) செல்வக்கந்தராசா ( சுவிஸ்) மதுராம்பிகை ( பிரான்ஸ்)  ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகட்க்கு. 
மகன். செந்தமிழ். +44 7446 102616


புதன், 13 மார்ச், 2024

நாட்டில் நான்கு வயது சிறுமிக்கு எமனாக மாறிய காய்ச்சல் மாத்திரை

மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளதாக 
குறிப்பிட்டுள்ளனர்
மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி 11-03-2024.அன்று 
 உயிரிழந்துள்ளார். ஓஷதி சவிந்தயா ராஜபக்ஷ என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். தாய் வௌிநாடு சென்றுள்ளதால் தாத்தா, பாட்டி மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து 
வந்துள்ளார்.
தந்தை அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள வேறொரு வீட்டில் வசித்து வருவதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து 
தெரியவந்துள்ளது.
 மஹியங்கனை வைத்தியசாலையில் சிறுமியின் தொண்டையில் சிக்கியிருந்த மாத்திரை அகற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலைக்கு 
மாற்றப்பட்டுள்ளார்.
விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை மரண விசாரணையை ஒத்திவைக்க திடீர் மரண பரிசோதகர் அமல் ஜயவர்தன நடவடிக்கை எடுத்திருந்தார்
.என்பது குறிப்பிடத்தக்கது





 

செவ்வாய், 12 மார்ச், 2024

ஹொக்கைடோவில் பனிச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழப்பு

ஜப்பானின் வடக்குப் பிரதான தீவான ஹொக்கைடோவில் பனிச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். 
1,898 மீட்டர் உயரமான யோடேய் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த இருவரும் நெதர்லாந்து நாட்டு பிரஜைகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஜப்பானின் கியோடோ வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஆறு பேர் கொண்ட குழு பனிச்சரிவில் ஈடுபட்டதாகவும், மூன்று பேர் பனிச்சரிவில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உயிர் பிழைத்தவரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது 





 

திங்கள், 11 மார்ச், 2024

சாவகச்சேரி ஏ-9 வீதி தபால் கந்தோர் வீதி சந்தியில் விபத்து இருவர் காயம்

யாழ் சாவகச்சேரி ஏ-9 வீதி , தபால் கந்தோர் வீதி சந்தியில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்கள்.
விபத்தில் காணமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார 
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
. சாவகச்சேரி பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது







 

ஞாயிறு, 10 மார்ச், 2024

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் இந்தோனேசியாவில் பத்ஒன்பது பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவை சேர்ந்த தீவு பிரதேசம், சுமத்ரா (Sumatra island). மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள பெசிசிர் செலடான் (Pesisir Selatan) பகுதியில் பெய்து வந்த கடும் மழையால், திடீர் வெள்ளமும், அதை தொடர்ந்து 
நிலச்சரிவும் ஏற்பட்டது.
இதில் தற்போது வரை குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர் என்றும் 7 பேரை காணவில்லை என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (National Disaster Management Agency) தெரிவித்துள்ளது.
இந்த சரிவினால் மலையில் இருந்த பெரிய மரங்கள் பெயர்ந்து விழுந்தன; பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன. இவற்றால் நதிக்கரையோர கிராமங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோடோ XI டருசான் (Koto XI Tarusan) பகுதியில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. 80 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; 14 வீடுகள் மண்ணில் புதைந்து விட்டன.
20 ஆயிரம் பேர்களின் வீடுகள் மேற்கூரை வரை முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மின்சாரத் தடை, சாலைகளில் ஓடும் வெள்ள நீர், குப்பைகள் போன்றவற்றால் மீட்பு குழுவினர் கடும் சிரமத்திற்கிடையே சிக்கியுள்ள மக்களை மீட்க முயன்று வருகின்றனர்.
 பெருமளவு மலைப்பிரதேசங்களை கொண்ட இந்தோனேசியாவில் வெள்ள அபாய பகுதிகள் ஏராளமாக உள்ளன..என்பது குறிப்பிடத்தக்கது.



சனி, 9 மார்ச், 2024

நாட்டில் ரம்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி

நாட்டில் ரம்பேவ பிரதேசத்தில்.09-03-2024. இன்று  காலை இடம்பெற்ற விபத்தில் 16, 19 மற்றும் 21 வயதுடைய மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
மூவரும் பிஹிம்பியகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 
விபத்தில் சிக்கிய இரண்டு சிறுமிகளும் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  
ரம்பேவயில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று வீதியில் பயணித்த  ஐந்து பேர் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 
இந்த குழுவினர் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது விபத்துக்குள்ளாகியுள்ளனர்.  
விபத்தை ஏற்படுத்திய கேப் அங்கிருந்து தப்பிச் சென்றது.
 சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பதாகும் 





 

வெள்ளி, 8 மார்ச், 2024

நாட்டில் வெடுக்குநாறிமலை ஆதி சிவனுக்கு நீர் கொண்டு சென்ற நபர் மருத்துவமனையில்

நாட்டில் வெடுக்குநாறிமலை ஆதிசிவனுக்கு குடிநீர் கொண்டு செல்ல முயன்ற சஞ்சீவன் என்ற இளைஞன் தண்ணீர் தாங்கி சரிந்து
 படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து 
செல்லப்படவுள்ளார்.
ஸ்ரீலங்கா பொலீஸ் இராணுவ அராஜகம் தமிழர்களுக்கு குடிநீர் தரவும் மறுக்கிறது தொடர்ந்து போராடுவோம் வெடுக்குநாறிமலை 
ஆதிசிவன் ஆலய பிரதேசத்துக்குள் பல்வேறு தடைகளை 
தாண்டி இறை
 வணக்கத்திற்காக உள்ளே சென்ற மக்களை குடிநீரை
 தடுத்து அட்டகாசம் புரிந்த நெடுங்கேணி பொலீஸ் அதிகாரிகள்
 இரண்டு மணி நேரம் தொடர்ந்து போராடி
 குடிநீரை உள்ளே 
கொண்டு செல்ல முயன்ற போது தண்ணீர் தாங்கி சரிந்து சஞ்சீவன் என்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 7 மார்ச், 2024

பங்களாதேஷில் பரீட்சையின் போது மாணவனை துப்பாக்கியால் சுட்ட ஆசிரியர்

 

பங்களாதேஷில் உள்ள மருத்துவப் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் மாணவர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர், இரண்டு நாட்களுக்குப் பிறகு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரைஹான் ஷெரீப் விரைவில் கைது செய்யப்பட்டார், ஆனால் சம்பவம் நடந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

காயமடைந்த மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டாக்டர் ஷெரீப் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். வடமேற்கு பங்களாதேஷில் உள்ள சிராஜ்கஞ்சில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 23 வயதான அராபத் அமின் டோமல் என்ற மாணவர், வாய்மொழி தேர்வில் ஈடுபட்டிருந்தபோது டாக்டர் ஷெரீப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பரீட்சையின் போது, டாக்டர் ஷெரீப் துப்பாக்கியை எடுத்து மாணவனை நோக்கி, வலது முழங்காலில் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 பொலிஸாரை மேற்கோள்காட்டி வங்காளதேச செய்தித்தாள் டெய்லி ஸ்டார் படி, புல்லட் திரு அமீனின் மொபைல் ஃபோனில், அவரது கால்சட்டையின் பாக்கெட்டில் தாக்கியதாக கூறப்படுகிறது, இது அவரது உயிருக்கு ஆபத்தான காயங்களைத் தப்பியது.என்பது குறிப்பிடத்தக்கது 








 

புதன், 6 மார்ச், 2024

நாட்டில் பாடசாலை மாணவி ஒருவர் தவறி விழுந்து உயிரிழப்பு

நாட்டில்கலவான பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
 குறித்த மாணவி.06-03-3024. இன்று காலை தவறி விழுந்த நிலையில் அருகில் இருந்த கான்கிரீட் சுவர் மாணவி மீது மோதியுள்ளது. 
இதில் பலத்த காயமடைந்த அவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
மீபாகம ஜெயந்தி மகா வித்தியாலயத்தில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 13 வயதுடைய மாணவியே மேற்படி சம்பவத்தில் 
உயிரிழந்துள்ளார். 
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகைளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது 





 

செவ்வாய், 5 மார்ச், 2024

நாட்டில் அடம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை டிலான் உயிரிழப்பு

நாட்டில் மன்னார் - அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள அடம்பன் நாற்சந்தியில் நேற்று (4) திங்கட்கிழமை மாலை 5.45 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த சலேசியன் சபையைச் சேர்ந்த அருட்தந்தை மரிசால் டிலான் (வயது-34) 
உயிரிழந்துள்ளார்.
 குறித்த விபத்தானது.04-03-2024. அன்று  திங்கட்கிழமைமாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து தொடர்பாக மேலும் 
தெரிய வருகையில்,
 வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் மன்னார் மடு தேவாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விட்டு நேற்று மாலை திரும்புகையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.என்பது  குறிப்பிடத்தக்கது 


திங்கள், 4 மார்ச், 2024

யாழ் வல்வெட்டித்துறை தீருவில் சாந்தனுக்கு அஞ்சலி செலுத்த மயானத்தில் திரண்ட மக்கள்

இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சாந்தன் 
உயிரிழந்துள்ளார். 
 நேற்றுமுன்தினம் உயிரிழந்த சாந்தனின் உடலைச்சுமந்த ஊர்தி, வவுனியா கிளிநொச்சி பளை கொடிகாமம் ஊடாக வடமராட்சியை இன்று பிற்பகல் 3 மணிக்கு வந்தடைந்தது.
 வடமராட்சி கலிகைச்சந்தி, துன்னாலை, மந்திகை ஊடாக மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தை ஊர்திப்பவனி வந்தடைந்ததும் அங்கு மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அங்கிருந்து
 நெல்லியடி மத்திய பஸ் நிலையத்திற்கு பிற்பகல் 3மணிக்கு ஊர்தி வந்துசேர்ந்தது. அங்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
அத்துடன் அஞ்சலி நிகழ்வில் வேலன் சுவாமிகள், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட மக்கள் பலர் ஒன்று கூடி
 அஞ்சலி செலுத்தினர். 
 அதனைத் தொடர்ந்து சாந்தனின் ஊர்திப்பவனி கரணவாய் நவிண்டில் உடுப்பிட்டி ஊடாக வல்வெட்டித்துறை தீருவில் மயானத்தை தற்போது வந்தடைந்துள்ளது.
தீருவில் மயானத்தில் பெருந்திரளான மக்கள் திரண்டு உணர்வுபூர்வமாக கண்ணீரோடு அஞ்சலி செலுத்தினார்கள்.
 சாந்தனின் வித்துடல்  இன்று அவரது சொந்த ஊரான உடுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு கிரியைகள் இடம்பெற்று எள்ளங்குளம் மைதானத்தில் தகனம் செய்யப்படும். என்பதாகும்











 

ஞாயிறு, 3 மார்ச், 2024

நாட்டில் வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலையில் தீவிபத்து

நாட்டில் வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலை ஒன்றில் தீ பரவியுள்ளது.  
தீ விபத்தின் போது பள்ளியில் கிட்டத்தட்ட 150 குழந்தைகள் இருந்தனர், ஆனால் அவர்கள் யாரும் தீயினால் பாதிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை விரைவாக அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும், தீயினால் பல சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது





 

சனி, 2 மார்ச், 2024

ஹரா பகுதியில் நேற்று பதிவான நிலசடுக்கம் அச்சத்தில் மக்கள்

ஜப்பானில் உள்ள ஹாராவில் நேற்று மாலை 4.49 நிலநடுக்கம்  ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக 
பதிவாகியுள்ளது.
ஜப்பானின் ஹரா பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் 
அச்சம் அடைந்தனர்.
குறிப்பாக நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த 
தகவலும் இல்லை.
மேலும் ஜப்பானில் உள்ள ஷிகோகுவில் கடந்த வாரம் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கமும் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியிருந்தது.
ரிங்க் ஆப் பயர் எனப்படும் புவி தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாது.என்பதாகும் 


 


 

வெள்ளி, 1 மார்ச், 2024

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை சாந்தனின் இறப்பு காந்தி தேசத்தின் அவலக் குறியீடு

 தேசம் காண ஆசையோடு இருந்தவருக்கு இந்தி அதிகாரம் எமனானது என சாந்தனின் இறப்பு குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 அந்த அறிக்கை வருமாறு: தமிழர் தேசக் கனவோடு தாயகம் 
பிரிந்து, இந்திய ஒன்றியத்தின் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ்காந்தி
 கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு,
 முழுமை பெறாத நீதி 
விசாரணையால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு 
தமிழர்களில் ஒருவராக 33 ஆண்டுகள் சிறைவாழ்வை
 அனுபவித்து தாயகம் காண காத்திருந்த தில்லையம்பலம் 
சுதேந்திரராஜா எனும் இயற்பெயருடைய சாந்தன் அவர்களை விரைவில் 
நாடு திரும்புவார் எனும் தமிழர்களின் 
எதிர்பார்ப்பும் 
தாயையும் தாய் மண்ணையும் காண வேண்டும் என்னும் இறுதி ஆசையும் நிறைவேறாமலேயே அவர் உயிர்பிரிந்த செய்தி தமிழர் இதயங்களைக் க
னக்க வைத்துள்ளது. 
 பெற்ற மகனை ஒரு முறையாவது உயிருடன் பார்த்து விட வேண்டுமென்ற தாய்க்கும் – மகனுக்கும் இடையிலான 33ஆண்டுகள் பாசப் போராட்டத்தில் சாந்தன் அவர்களின் இழப்பு அனைவரையும் வெடித்தழ 
வைக்கின்றது. இறப்பு நிகழ்ந்த 28ஆம் திகதி காலையில் கூட மகன் வருவான்
 என்று கோவில் தீர்த்தத்துடன் காத்திருந்த தாய்க்கு வாழ்நாள் ஏக்கம் கனவாய்ப் போனது பெருந்துயர்! 
 ஏதும் அறியா இளைஞனாக தமிழகம் வந்தவரை மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாகச் சிறைப்படுத்தி, சித்திரவதை செய்து நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களின் பின்னர் 2022ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி இந்திய ஒன்றிய உச்ச நீதிமன்றம் விடுதலை
 செய்த பின்னரும்
 இயற்கை நீதிக்கு முரணாக தொடர்ந்து 15 மாதகாலம் திருச்சி சிறப்பு முகாமில் தடுப்பில் வைத்திருந்து உடல், உள ரீதியாய் பலவீனப்படுத்தி 
சிறுகச் சிறுகச் கொன்று தாயையும் தாய் மண்ணையும் காண ஆவல் கொண்டிருந்தவரை இன்று உயிரற்ற சடலமாய் அனுப்பி 
வைத்திருக்கிறது இந்தியம். 
 பாரத தேசத்தின் பிராந்திய நலன்களிற்கு எதிராகச் செயற்பட்டு தொடர்ந்தும் அவமதித்து வரும் சிறிலங்கா அரசுடன் நட்புப் பாராட்டும் காந்தி தேசம், தங்களின் அற்ப பூகோள நலன்களிற்காக தங்களை நோக்கி
 என்றுமே நேசக்கரம் நீட்டும் ஈழத்தமிழ் மக்களைத் வஞ்சிப்பதென்பது அந்த நாடு இதுவரைகாலமும் தான் கொண்ட வரலாற்றிற்கும் பெருமைகளிற்கும் இழுக்கானதாகும். 
அன்று முதல் இன்று வரை காந்தியின் பெயர்கொண்டு, புரியும் கொடுரங்களால் தனக்கு மேல் போர்த்திய போர்வை களைந்து நிர்வாணமாய் நிற்கின்றது காந்தி தேசம். நேற்று வியாழக்கிழமை நடந்த நீதிமன்ற 
வாதங்களில்
 தமிழக அரசு வழக்கறிஞரின் கூற்றுப்படி தமிழக அரசே 
சாந்தன் அவர்களை விடுவிப்பதில் காலந்தாழ்த்தியது எனும் துயரச் செய்தி, எமக்காய் தமிழக உறவுகளும் தமிழக அரசும் நிற்பார்கள் 
என்று நம்பும் ஈழத்தமிழ் மக்களிற்கு துரோகச் 
செய்தியாய்ப் போனது
 இன்னுமொரு பெருந் துயரம்! சாந்தன் அவர்களைத்
 தாயகம் அழைத்து வருவதற்கு இறுதி ஒரு மாதகாலத்திற்குள் காணப்பட்ட ஏதுநிலையை குறிப்பிட்ட சில காலங்களிற்கு முன்னதாகவேனும் உருவாக்கிட
 நடவடிக்கை ஏதும் எடுத்திருந்தாற் கூட பெற்ற தாயைக் 
காண வேண்டும் எனும் இறுதி ஆசையையேனும் நிறைவேற்றிக் கொடுத்திருந்திருக்கலாம். 
ஆனால், ஏழு தமிழர்கள் இந்திய ஒன்றிய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஒன்றாண்டு காலப்பகுதிக்குள் ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் கூட்டாக ஒரு தீர்க்ககரமான தீர்மானங்களெதனையும்
 மேற்கொள்ளாது, அசமந்தமாகவும் அலட்சியப் போக்குடனும் செயற்பட்டமை 
என்பது மன்னிக்க இயலாத கண்டனத்திற்குரியதொன்று.
 நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் 
இயற்கை நீதிக்கு
 விரோதமாக சிறப்பு சித்திரவதை முகாம்களில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ளவர்களையும் விடுதலை செய்து ஈழத்தமிழர்களை சிதைத்தெடுக்கும் சித்திரவதை முகாமிற்கு இனியாவது முடிவுரையெழுத இந்திய ஒன்றிய, மாநில அரசுகளை 
வேண்டுகின்றோம். 
 ராஜீவ்காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏனைய மூன்று ஈழத்தமிழர்களையும் அவர்கள் விரும்பும் இடங்களில் வசிப்பதற்கு அனுமதிக்க வேண்டுவதோடு, தாயகம் திரும்ப எவரேனும் விரும்பினால் அவர்களை அழைத்து வர இனியாவது உரிய நடவடிக்ககை 
எடுக்குமாறு ஈழத்தமிழ் அரசியல் தரப்புக்களையும் சிறிலங்கா, இந்திய அரசுகளையும் வலியுறுத்துகின்றோம். 
 நீதியைக் காத்து நிலைநாட்டுவதில் பக்கம் சாராமல் இந்திய உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்ட காலம் முதல் அவர்களின் விடுதலைக்கான காலம் வரையில் காலத்திற்குக் காலம் எத்தனையோ 
வாய்ப்புக்களை வழங்கியும் இந்திய ஒன்றிய அரசும் 
தமிழக அரசும் தொடர்ச்சியான சட்ட செயற்பாடுகளின் மூலம் தாமதப்படுத்தியமை என்பது ஈழத்தமிழ் மக்களின் மீதான கசப்புணர்வையே வெளிப்படுத்தியிருப்பதாகவே எண்ணத்
 தோன்றுகின்றது. 
இனிமேலாவது ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளிற்கு விரோதமான செயல்களிற்கு முற்றுப்புள்ளி வைத்து, ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க உளச்சுத்தியுடன் இந்திய அதிகாரம் செயற்பட வேண்டுகின்றோம். 
 உயிரோடு வந்தவரை இன்று உயிரற்று அனுப்பி வைத்துள்ளது பாரதம்! சாந்தன் அவர்களின் இறப்பு – காந்தி தேசத்தின் அவலக் குறியீடு! – என்றுள்ளது
என்பதாகும் எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி