வட சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் 19-03-2024.அன்று மாலை, 51 பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் சென்று கொண்டிருந்தது.
அந்த பஸ் ஹோஹோட் - பீஹாய் விரைவு சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் நுழைந்தது. அப்போது அந்த பஸ் டிரைவரின்
கட்டுப்பாட்டை இழந்த பஸ் சுரங்கத்தின் தடுப்பு சுவர் மீது
அதிபயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்க்கும்
பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 37 பேரை மீட்பு குழுவினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக