siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 31 மார்ச், 2023

மல்லாவி கொல்லவிளாங்குளத்தில் திருமணமாகி 5 மாதங்களில் உயிரிழந்த பெண்

முல்லைத்தீவு – மல்லாவி கொல்லவிளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் 23-03-2023-அன்று  இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
வீட்டில் இருந்து மின்சாரத்தினை வெளியில் முற்றத்தில் வெளிச்சம் போடுவதற்காக எடுக்கப்பட்டிருந்த நிலையில், மின்சார வயரினை பிடித்த வேளையிலேயே குறித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயதான பிரபாகரன் சுதாஜினி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் திருமணமாகி 5 மாதங்கள் ஆன நிலையில் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு 
உத்தரவிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக