அமெரிக்காவில் கார் ஒன்று மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் குஜராத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தின் அனந்த் மாவட்டத்தை சேர்ந்த ரேகாபென் படேல், சங்கீதாபென் படேல் மற்றும் மனிஷாபென் படேல் ஆகியோர்
அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் உள்ள கிரீன்வில்லி மாகாணத்தில் உள்ள காரில் சென்றுக் கொண்டிருந்தபோது,
கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மோதி
விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், " வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 20 அடி உயரத்தில் பறந்து
பாலத்தின் எதிர்புறத்தில் உள்ள மரம் மீது மோதி
விபத்துக்குள்ளானது.
கார் வேக வரம்பை விட வேகமாக பயணம் செய்துள்ளது. மரத்தில் மோதிய வேகத்தில் கார் சுக்குநூறாக நொருங்கியது.
3 இந்தியப் பெண்கள் உயிரிழந்த நிலையில், விபத்தில் உயிர் பிழைத்த ஒரு நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக