கனடாவின் ஒன்டாரியோவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்
தெரிவிக்கின்றன.
தீயை அணைத்த பிறகு மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. எவ்வாறாயினும், அவர்களின் அடையாளத்தை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீட்டிற்கு யாரேனும் தீவைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக