siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 26 செப்டம்பர், 2016

மிக விரைவில் கீரிமலையில் 50 வீடுகளுக்கு மின்விநியோகம்!

வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள காணியற்றவர்களுக்கான வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டம் கீரிமலையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலையில்  அவற்றில்  50 வீடுகளுக்கு மின்சார விநியோகம் விரைவில் வழ ங்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரால்  இவ்வீடுகள் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுவருகிறது.இதில் 140 வீடுகளின்  பணி ஏறத்தாழ பூர்த்தியா கும் நிலையை எட்டியுள்ளது. 
இதில் 50 வீடுகளுக்கு விரைவில் மின்சார விநியோகம் வழங்கப்படும் என்பதையே மின்சார சபை உறுதிப்படுத்தி இருக்கின்றது. 
மின்சாரக் கம்பங்களை நடும் பணி ஆரம்பித்து விட்ட நிலையில் இன்னும் சில வாரங்களில் குறிக்கப்பட்ட 50 வீடுகளுக்கும் மின்சார விநியோகம் ஆரம்பித்து விடும் என்று தெரிவிக்கப்படுகின்றது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

சிவகேசவன் எழுதிய மூன்றாவது நூல்..வெளிவருகிறது

சேமமடுவூர் சிவகேசவன் மூன்றாவது நூல்.....
"வவுனியாக் குளப் பண்பாட்டுச் சூழலில் கிராமிய வழிபாடு" என்ற எனது ஆய்வு நூலின் அச்சுப் பணிகள் நிறைவடைந்துள்ளன..  
இந்த நுால்:வெளியீட்டு விழாவின்றி வெளிவர இருக்கின்றது அத்தோடு
இந்த நூலை நூலகங்களிற்கு அன்பளிப்புச் செய்ய எதிர்பார்க்கிறார் சேமமடுவூர் சிவகேசவன்
. வவுனியா மாவட்டத்தில் கிராமிய வழிபாடுகளைத் தொடரும் ஆலயங்களில் என்னால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இவ் ஆய்வு நூல் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. என்பது குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

இனி O/L சித்தியடையாத மாணவர்களுக்கும் A/L படிக்கலாம்


2018ம் ஆண்டு முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கும் உயர்தரத்தில் கல்வி கற்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர்
 தெரிவித்துள்ளார். 
இதன்படி 2017ம் ஆண்டு தொடக்கம் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மாணவர்கள் பெறும் பெறுபேறுகளுக்கு அமைய விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம் மற்றும் கலைப் பிரிவுகளுக்கு அவர்கள் தேர்வு செய்யப்படுவர் என கூறியுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




செவ்வாய், 20 செப்டம்பர், 2016

கொழும்.- யாழ்ப்பாணம் செல்பவர்கள் வாசிக்க வேண்டியது!

ஹயஸ், டொல்பின் ரக வாகனங்களில் கொழும் – யாழ்ப்பாணம் செல்பவர்கள் கட்டாயம் வாசிக்கவும் கொழும்பு யாழ்ப்பாண பயணிகளின் கவனத்திற்கு, Dolphins hires Van இல் இரவு நேரத்தில் பயணிப்பவர்கள்
நீங்கள்? உங்களுடைய பயணத்தின் போது கவனிக்க வேண்டிய சில விடயங்கள்
1. அடிக்கடி இந்த வானில் பயணிப்பவர்களுக்கு விபத்துக்கள் நடைபெறுகிறது. இதற்கு காரணம் சாரதி மட்டும் அல்ல, நீங்கள் எடுக்கும் சில அவசர தீர்மானங்களும் தான். அத்துடன் உங்கள் தீர்மானங்ககளை எடுக்கும் போது இதனால் வரும் பின் விளைவுகளை கொஞ்சமும் நீங்கள்
 சிந்திப்பதில்லை.
2. வாகனத்தை hire பண்ணும் போது வாகன சாரதி யார் என்று பாருங்கள் அத்துடன் இரவு நேர பயணம் என்றால் ஏற்கனவே அவர் இந்த ரூட் இல் இரவில் ஓடிய அனுபவம் உள்ளவரா ? அத்துடன் தொடர்ச்சியாக ஓடுபவரா என்று பாருங்கள். ஏனெனில் அனுபவம் உள்ளவர் தான் நித்திரை இல்லாமல் ஓடமுடியும். இதுதான் மிகமுக்கியமான ஒன்று.
வான் condition ஐ விட driver condition ஐ பார்க்க
 வேண்டும்
3. வாகனத்தை hire பண்ணுவார்கள் நீங்கள் அதனால் வாகன சாரதியை உங்கள் கட்டுப்பாடிற்குள் வைத்திருக்க வேண்டும். Driver சொல்லுவற்கெல்லாம் தலை ஆட்ட கூடாது.
உதாரணமாக அவர் அடிக்கடி phone கதைப்பவராக இருந்தால் நாம் அதை கட்டுப்படுத்த அறிவுறுத்த வேண்டும்
4. Maximum speed என்ற ஒன்று உண்டு எனவே அதை தாண்டி போகிறாரா என்று பார்க்க வேண்டும்.
5. கூடுதலாக எந்த வான் சாரதியும் இரவு நேரத்தில் தான் பயணிக்க ஆசைப்படுவான் ஏனெனில் அவனுக்கு driving செய்வது மிகவும் இலகு. ஆனால் இங்கே தான் ஆபத்து இருக்கு, road இல் வாகன நெரிசல் இரவு நேரங்களில் மிகவும் குறைவு இதனால் இந்த சூழ்நிலை driver ஐ நித்திரை கொள்ள வழி வகுக்கும்.
6. பயணிக்கும் நேரம்.??? பொதுவாக கடுமையாக நித்திரை தூங்கும் நேரம் அதிகாலை 2 மணி தொடக்கம் 5 மணி வரை எனவே எமது பயணத்தை மாலை ஒரு 5 மணி அளவில் தொடங்கினால் நாம் யாழ்ப்பாணத்தை அல்லது கொழும்பை அதிகாலை 2 மணியளவில் அல்லது அதற்க்கு முன்னர் அடையலாம்.
அல்லது அதிகாலை 3 அல்லது 4 மணியளவில் தொடங்கினால் பகல் 12 மணிக்கு முதல் எமது இடத்தை அடையலாம்.
அடிக்கடி தேநீர் அருந்த அல்லது wash room போக என வாகனத்தை நிறுத்தி செல்லுங்கள்.
இதனால் விபத்துக்கள் குறைய வாய்ப்புண்டு.
அத்துடன் திடீர் திடீர் என முளைக்கும் புதிய van உரிமையாளர்களும் van சாரதிகளும். வெளிநாட்டில் இருந்து காசு வருமானால் எல்லாரும் யோசிக்கும் இலகு தொழில் இந்த வான் ஓட்டம். இதைவிட இது இப்பொழுத வெளிநாட்டுகாரனின் investment ஆக்கிவிட்டுது.
எனவே கொஞ்சம் சிந்தித்து பயண
 முடிவுகளை எடுங்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






சனி, 17 செப்டம்பர், 2016

திருமலையில் இந்துக் கோயில்கடலின் கீழ் காணொளிஇணைப்பு

திருகோணமலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல் பெற்ற திருத்தளங்களுள் ஒன்றான திருக்கோணோஸ்வரர் இந்து ஆலயம் உள்ளது இது இலங்கை வரலாற்றில் தமிழர் மற்றும் இந்துக்களின் பழமைக்கு ஆதாரமாக உள்ளதாக பல வரலாற்று ஆய்வாளர்கள் 
கூறியுள்ளனர் இராவண வெட்டும் இன்று வரை பலரால் அவதானிக்கப் படுவதுடன் ஆழ்கடலில் புதிதாக படகுகளை எடுப்பவர்கள் வழிபட்டு தங்கள் தொழில்களைத் தொடங்குவதும் ஒரு மரபாக
 உள்ளது இந்தச் சூழலில் இப் பகுதியில் கடலின் கீழ் கோணேஸ்வரர் பழைமையான இந்துக் கோயிலும் இருப்பதாக சமகால ஆய்வுகளில் வெளியாகியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
                                            காணொளிஇணைப்பு 



செவ்வாய், 13 செப்டம்பர், 2016

நீதிமன்ற வளாகத்தில் வைத்து வெள்ளை வானில்மூவர் கடத்தல்!

யாழ். நீதிமன்ற வளாகத்தில் வைத்து மூவர் பலவந்தமாக கடத்தி செல்லப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது
இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையில் ஆஜராகி,
பின்னர் வெளியில் வரும்போது வெள்ளை வானில் வந்தவர்கள், குறித்த மூவரையும் பிடித்து இழுத்து வானுக்குள் பலவந்தமாக தள்ளி , ஏற்றிக்கொண்டு சென்றமையால் அந்த வளாகத்தில் ஒருவகை பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் பின்னர், யாழ். நீதிமன்ற கட்டிடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான வழக்கு,  யாழ். நீதிமன்றில் இன்று இடம்பெற்றது.
குறித்த வழக்கு விசாரணையில் 74 பேர், நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். அவ்வாறு ஆஜராகிவிட்டு, நீதிமன்றத்தை விட்டுவெளியேறும் போதே, வெள்ளை வானில் வந்தவர்கள், மூவரை மட்டும் பிடித்து இழுத்து வெள்ளை வானுக்குள் ஏற்றி, தலைமறைவாகியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 9 செப்டம்பர், 2016

மகளில் கல்லூரி யின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

யாழ் உடுவில் மகளில் கல்லூரி மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இடைநிறுத்தப்பட்டு, கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம்
 தெரிவித்துள்ளது.
கல்லூரியின் முன்னாள் அதிபர், புதிய அதிபர் மற்றும் மாணவர்களுடன் நீதிபதி யூட்சன் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கல்லூரி அதிபராகப் பதவி வகித்து வந்த சிரானி மில்ஸின் எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அதிபரிடம் பொறுப்புக்களை கையளிப்பார் என மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ .யூட்சன் 
தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 6 செப்டம்பர், 2016

விபத்தில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய இரு பிள்ளைகள்

யாழ் பிரதான வீதியில் காருடன் முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்தார். 
இன்று மதியம் 2.00 மணியளவில் யாழ் பிரதான வீதியில் பயணித்து கொண்டிருந்த காரும் 3ஆம் குறுக்கு வீதியில் இருந்து குருநகர் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. 
இவ் விபத்தில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது , முச்சக்கரவண்டியும் சேதமடைந்ததுடன் ஓட்டுனருக்கும் 
காயம் ஏற்ப ட்டது. 
காரினுள் சிறு பிள்ளைகள் இருவர் பயணம் செய்திருந்தும் தெய்வாதீனமாக எவ்வித சேதமுமின்றி காப்பாற்றப்பட்டனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 5 செப்டம்பர், 2016

தலைநகர் கொழும்பின் அதி சொகுசு வீட்டு நிர்மானத் திட்டங்கள்!

கறுப்புப் பணத்தை முதலீடு செய்யக்கூடிய சிறந்த இடமாக தலைநகர் கொழும்பின் அதி சொகுசு வீட்டு நிர்மானத் திட்டங்கள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகின் முன்னணி வர்த்தக வங்கிகளில் ஒன்றான ஹொங்கொங் என்ட் ஷங்காய் பேன்கின் கோப்ரேசன் லிமிடட்(எச்.எஸ்.பி.சீ) நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
வெளியிடப்படாத சொத்துக்கள் மற்றும் கறுப்புப் பணத்தை முதலீடு செய்வோருக்கு ஓர் சிறந்த வாய்ப்பாக கொழும்பின் அதி சொகுசு வீட்டு நிர்மானத் திட்டங்கள் அமைந்துள்ளதாகத் 
தெரிவித்துள்ளது.
இதற்கு சமாந்திரமாக 2018ஆம் ஆண்டளவில் கொழும்பில் நிர்மானிக்கப்படும் அதி சொகுசு வீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்வடையும் என பியோன்ட் மினி என்ற சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.
வருமான வழியை குறிப்பிட விரும்பாத தரப்புக்கள் காணி மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதாக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 31 ஆகஸ்ட், 2016

அச்சுவேலி தோப்பு மயானத்தில் தோண்டப்பட்ட பெண்ணின் சடலம்!!!

எனது மனைவி கொலை செய்யப்பட்டுத்தான் இறந்தார்’ என கணவரால் கூறப்பட்டமையால், அச்சுவேலி தோப்பு மயானத்தில் புதைக்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம். மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய செவ்வாய்க்கிழமை (30) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
    யாழ் அச்சுவேலி மேற்கு தென்மூலை பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற சண்டையில், கீழே வீழ்ந்து தேவராஜா மனோரம்மா (வயது 41) என்ற 3 பிள்ளைகளின் தாயார் உயிரிழந்தார். அவரது கணவர் வெளிநாட்டில் வசித்து வந்தார்.
உடல் பலவீனம் காரணமாக கீழே வீழ்ந்து அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டு, அந்தப் பெண்ணின் சடலம் மேற்படி மயானத்தில் அதே மாதம் 10 ஆம் திகதி புதைக்கப்பட்டது.
எனினும், தனது தாயாரை அவரது சகோதரர்கள் கொலை செய்தனர் என அந்தப் பெண்ணின் பிள்ளைகளில் ஒருவர், வெளிநாட்டில் (பிரான்ஸ்) இருந்து வந்த தந்தைக்கு கூறினார். இதனையடுத்து, ‘எனது மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்’ என கணவர் பொன்னுத்துரை தேவராஜா, மல்லாகம் நீதிமன்றத்தில் சட்டத்தரணியூடாக வழக்குத் தாக்கல் 
செய்தார்.
இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் பிரகாரம் ‘சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து, சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்’ என்ற உத்தரவை நீதிவான் ரீ.கருணாகரன் பிறப்பித்தார்.
அதற்கிணங்க நீதிவான், மன்னார் சட்டவைத்தியதிகாரி டபிள்யூ ஆர்.ஈ.எஸ்.ராஜபக்ஷ ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (30) சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
தோண்டி எடுக்கப்பட்ட சடலத்தை பரிசோதனைக்கும், சான்றுப்பொருட்களை இரசாயனப் பகுப்பாய்வுக்கும் உட்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக எவரும் இதுவரையில் கைது செய்யப்பட்டிருக்கவில்லையென்பது 
சுட்டிக்காட்டத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 29 ஆகஸ்ட், 2016

புதன்கிழமை அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நல்லூர் தேர்த்திருவிழா எதிர்வரும் புதன்கிழமை (31) இடம்பெறவுள்ளமையினால் அன்றைய தினம் யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை
 வழங்கப்பட்டுள்ளது.
பதில் பாடசாலை 3 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் இதற்கமைய 3 ஆம் தவணைக்கான பாடசாலைகள் 1 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகும் என வடமாகண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன்
 அறிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

சந்திகளில் வீதி்ச்சமிக்ஞை விளக்குகள்: அமைக்கும் பணிகள் தீவிரம்

யாழ். குடாநாட்டின் ஆறு முக்கிய சந்திகளில் வீதிச் சமிக்ஞை விளக்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ். நகரை அண்டியுள்ள வேம்படிச் சந்தி, ஆரியகுளம் சந்தி, திருநெல்வேலிச் சந்தி, கோப்பாய்ச் சந்தி, சுன்னாகம் சந்தி, நெல்லியடிச் சந்தி ஆகிய ஆறு முக்கிய சந்திகளிலேயே இவ்வாறு வீதிச் சமிக்ஞை விளக்குகள் அமைக்கப்படவுள்ளன.
திருநெல்வேலிச் சந்தி, கோப்பாய்ச் சந்தி ஆகிய இரு சந்திகளிலும் சமிக்ஞை விளக்குகளை பொருத்தப்பட்டுள்ள நிலையில் ஏனைய நான்கு சந்திகளிலும் வீதிச் சமிக்ஞை விளக்குகளைப் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
யாழ். குடாநாட்டில் இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை வட்டாரங்கள் 
தெரிவித்துள்ளன.
இதேவேளை, அண்மைக் காலமாக யாழ். குடாநாட்டின் முக்கிய சந்திகளான மேற்படி சந்திகளில் போக்குவரத்து நெரிசல் வழமையை விட அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்த நிலையில் வீதிச் சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்படுவதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், வீதி விபத்துக்களையும் தவிர்க்க முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 27 ஆகஸ்ட், 2016

உலகின் பழைய 145 வயது நிரம்பிய முதியவர்!

இந்தோனேஷியாவில் வசித்து வரும் உலகின் பழைய மனிதர், தான் மரணிப்பதற்கு தயாராக இருக்கின்றபோதும், மரணம் என்னை நெருங்க மறுக்கிறது என கூறுகிறார்
இந்தோனேஷியாவில் வசித்து வரும் Mbah Gotho, 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி பிறந்தார். இவருக்கு தற்போது வயது 145.
இவர் இந்தோனேஷியாவின் பழைய மனிதர் மட்டுமின்றி, உலகின் பழைய மனிதர் என்ற வரிசையிலும் இடம்பிடித்துள்ளார்.
இவருக்கு 4 மனைவிகள், 10 குழந்தைகள் இருந்துள்ளனர், இவரின் மனைவியர் மற்றும் குழந்தைகள் அனைவரும் இறந்துவிட்டனர், கடைசி மகன் 1988 ஆம் ஆண்டு உயிரிழந்தான்.
இந்நிலையில் இவர் தனது பேரக்குழந்தைகள், கொள்ளு பேரக்குழந்தைகளுடன் தனது வாழ்நாட்களை கழித்து வருகிறார்.
தனது வாழ்க்கை குறித்து இவர் கூறியதாவது, எனது பேரக்குழந்தைகள் யாரையும் சார்ந்து வாழ்பவர்கள் கிடையாது, எனவே அவர்கள் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள்
நான் தற்போது கூட மரணிப்பதற்கு தயாராக இருக்கிறேன், ஆனால் மரணம் என்னை நெருங்க மறுக்கிறது
24 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1992 ஆம் ஆண்டு எனக்கு கல்லறை கட்டி வைக்கப்பட்டது.
ஆனால் காலங்கள் கடந்துவிட்டபோதிலும், கல்லறை அப்படியே இருக்கிறது, என்னால் தான் இறக்கமுடியவில்லை என கூறியுள்ளார்.
இவரது பேரக்குழந்தைகளில் ஒருவர் கூறியதாவது, எனது தாத்தா எப்போதும் ரேடியோ அருகில் அமர்ந்துகொண்டு நாட்டு நடப்புகளை பற்றி தெரிந்துகொள்வார்.
அவருக்கு கண்பார்வை சரியாக தெரியாத காரணத்தால், தொலைக்காட்சி பார்க்க இயலாது, அவரது விருப்பபடியே அவருக்கு கல்லறை கட்டி வைக்கப்பட்டுள்ளது.
தனது வேலைகளை அவராகவே கவனித்துகொள்வார். கடந்த 3 மாதங்களால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் குளிப்பதற்கு கூட சிரமப்படுகிறார் என கூறியுள்ளார்.
145 வயது வரை வாழ்ந்துள்ளீர்களே, அதன் ரகசியம் என்ன என்று இந்த முதியவரிடம் கேட்டால், அதற்கு அவர் கூறிய ஒரு வார்த்தை பதில் "பொறுமை".
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

கள்ளக்காதலர்கள் சிறுப்பிட்டி பகுதியில் சுற்றி வளைத்து பிடிக்கபபடடனர்!


மினிவானுக்குள் ஏற்பட்ட கள்ளக்காதல் மோகத்தை நிறைவு செய்வதற்காக யாழ்   சிறுப்பிட்டிப்பகுதியில் உள்ள பாழடைந்த சனசமூகநிலையக் கட்டடத்தினுள் புகுந்து கொண்ட 33 வயதான குடும்பப் பெண் ஒருவரும் 21 வயதான இளைஞனும் அப்பகுதி இளைஞர்களால் சுற்றி வளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் பிடிக்கப்பட்ட இளைஞன் நையப்புடைக்கப்பட்டதுடன் குடும்பப் பெண்ணும் கடுமையாக கவனிக்கப்பட்டு வீதியால் சென்று கொண்டிருந்த பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த குடும்பப் பெண் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இளைஞன் கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.
நகரப்பகுதியில் உள்ள நிறுவனத்தில் கடமையாற்றும் இளைஞனுக்கும் குறித்த குடும்பப் பெண்ணுக்கும் தனியார் பயணிகள் பேரூந்தில் கள்ளக்காதல் மலர்ந்துள்ளதாக விசாரணைகளில் 
தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 8 ஜூலை, 2016

இலவச கல்வி கருத்தரங்கு புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கு!

தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்குகள, பயிற்சி பரீட்சைகள் என்பன இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தின் ‘அரும்பு’ கல்வி செயற்திட்டத்தின் கீழ் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.
தெல்லிப்பழை மகாஜன கல்லூரி மற்றும் இளவாலை ஹென்ரியரசர் கல்லூரிகளில் இடம்பெறும் இப்பரீட்சைகள்,கருத்தரங்குகளில் எந்த பாடசாலை மாணவர்களும் கலந்துகொள்ள 
முடியும்.
எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை பிரபல புலமை ஆசிரியர் ‘குட்டிசுட்டி’ மதன் அவர்களின் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு இளவாலை ஹென்ரியரசர் கல்லூரியில் இடம்பெற உள்ளது..-
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 27 ஜூன், 2016

ஜேர்மன் குடியுரிமையை எப்படி பெறுலாம்?

ஜேர்மன் நாட்டு குடியுரிமை பெறுவது அல்லது அந்நாட்டில் நிரந்தரமாக குடியிருக்கும் உரிமையை பெறுவது எப்படி என்பதற்கான விரிவான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஜேர்மன் குடியுரிமை அல்லது நிரந்தர குடியிருப்பு உரிமையை பெறுவது என்பது சாதாரணமான விடயம் இல்லை என அந்நாட்டு வெளியுறவு துறை இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல், ஜேர்மன் குடியுரிமையை பெறுவதாக இருந்தால் தற்போதையை குடியுரிமையை இழக்கவும் நேரிடும் என்ற சூழ்நிலை அங்கு நிலவி வருகிறது
ஆனால், ஜேர்மன் குடியுரிமை பெறுவதற்கும் மற்றும் நிரந்தர குடியிருப்பு அனுமதி பெறுவது எப்படி என்பதற்கான தகவல்களை பார்ப்போம்.
நிரந்தர குடியிருப்பு அனுமதி பெறுவது எப்படி?
நிரந்தர குடியிருப்பு அனுமதி என்பது ஜேர்மன் குடியுரிமை பெறாமல் அந்நாட்டிலேயே நிரந்தரமாக அல்லது நீண்ட வருடங்களாக குடியிருக்கும் உரிமையாகும்.
இந்த அனுமதியை பெறுவதற்கு ஒரு நபர் குறைந்தது 5 வருடங்கள் ஜேர்மனியில் தங்கியிருக்க வேண்டும்.
ஒரு ஜேர்மன் குடிமகனுக்கு இருக்க வேண்டிய அத்தனை திறமைகளும் இருக்க வேண்டும். பொருளாதார ரீதியில் பலப்படுத்திக்கொண்டு. சுகாதார காப்பீடு பெற்றுருப்பதுடன் எவ்வித குற்ற வரலாறுகளும் இல்லாமல் இருந்திருக்க வேண்டும்.
இதற்கு அடுத்ததாக EC Residence எனப்படும் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதனுடன் வரையறுக்கப்பட்ட குடியிருப்பு அனுமதியும்(Limited residence permit) கிடைக்கும்.
அதாவது, பணி செய்ய அனுமதிக்கும் அங்கீகாரம் ஆகும். இந்த அனுமதி கிடைத்தால், இதனை பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம்.
அதே சமயம், குடியமர்வு அனுமதியும்(settlement permit) பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இதனை பயன்படுத்தி அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் வசிக்க முடியாது.
இந்த அனுமதியை 5 வருடங்களுக்கு குறைவாக வசித்திருந்தாலும் பெற்றுக்கொள்ளலாம்.
ஜேர்மன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மாணவன் 2 வருடங்கள் தங்கியிருந்தாலும் கூட, அவர் குடியமர்வு அனுமதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
அதேபோல், EU Blue Card பெற்றுள்ளவர்கள் (அதாவது 49,600 யூரோ அல்லது 38,688 யூரோக்கு மேல் மொத்த வருவாய் பெறுபவர்கள்) 33 மாதங்கள் அல்லது 21 மாதங்கள் வசித்திருந்தாலும் அவர்களிடம் B1 மொழி அங்கீகாரம் இருந்தால் அவர்கள் நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பம் 
செய்யலாம்.
மேலும், வெற்றிகரமாக சுயதொழில் செய்து வரும் நபர்கள் 3 வருடங்களில் கூட நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இதுமட்டுமில்லாமல், பெரும் தகுதிப்படைத்த அறிஞர்கள், விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்கள் ஜேர்மனியில் தஞ்சம் அடைந்தால் அவர்களுக்கு விரைவில் நிரந்தர குடியிருப்பு அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஜேர்மன் குடியுரிமையை பெறுவது எப்படி?
ஜேர்மனில் limited residence permit-ன் கீழ் குடியுரிமையை பெற வேண்டும் என்றால், அவர் அந்நாட்டில் குறைந்தது 8 வருடங்கள் வசித்திருக்க வேண்டும்.

எனினும், அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ள ஜேர்மன் மொழி கற்பிக்கும் வகுப்புகளில் பங்கேற்று இருந்தால், 7 வருடங்களில் கூட குடியுரிமையை பெற்று விடலாம்.
இவை அனைத்தையும் விட முக்கியமானதாக, ஜேர்மன் மொழி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதாவது, ஜேர்மன் மொழியில் பேசுவது மட்டுமில்லாமல், அம்மொழியில் எழுதவும், அதிகாரிகள் அளிக்கும் பயிற்சியினை ஜேர்மன் மொழியில் செய்து முடிக்கவும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். இது தான் மிக அவசியமான 
தகுதியாகும்.
அதே போல், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நபர் அவருடைய தாய்நாட்டின் குடியுரிமையை இழக்க வேண்டும். ஒரு வேளை அவரது தாய்நாடு இதை அனுமதிக்காவிட்டால், அவருக்கு சில விதிவிலக்கு 
அளிக்கப்படும்.
மேலும், அரசு நிதியுதவியை எதிர்ப்பார்க்காமல் சொந்தக்காலில் நின்று தனது செலவுகளை பார்த்துக்கொள்ளும் திறமை இருக்க வேண்டும். ஏற்கனவே கூறியது போல், எவ்வித குற்றப்பின்னணியும்
 இருக்க கூடாது.
இறுதியாக, ஜேர்மன் குடியுரிமையை பெறுவதற்கு B1 வரிசையில் ஜேர்மன் மொழியில் 33 கேள்விகள் கேட்கப்படும்.
ஜேர்மன் நாட்டின் வரலாறு, சட்டங்கள், குடிமக்கள் உள்ளிட்டவைகளை பற்றி கேள்விகள் அமைந்திருக்கும்.இந்த 33 கேள்விகளில் குறைந்தது 17 கேள்விகளுக்கு சரியாக பதில் 
அளிக்க வேண்டும்.
இவ்வாறு மேற்கூறிய அனைத்து விதிமுறைகளையும் சரியாக பின்பற்றினால், உங்களுக்கு ஜேர்மன் குடியுரிமை மற்றும் நிரந்தர குடியிருப்பு அனுமதி நிச்சயமாக கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.



புதன், 22 ஜூன், 2016

நீராடச் சென்ற இளைஞர்ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்!!

ஊவாபரணகம பிரதேசத்தில் 8 பேருடன் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
விகாரையொன்றில் நடைபெற்ற பொசன் தன்சல் நிகழ்வுக்கு சென்று விட்டு நண்பர்கள் 8 பேர் நீராடச் சென்ற போது 21 வயது இளைஞர்ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
வெலிமடை வெலிமடைகம பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஊவபரணகம பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 9 ஜூன், 2016

வருகிறது மருத்துவமனை பேஸ்புக் அடிமைகளை மீட்க?

இதோ பேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக மருத்துவமனை அல்ஜீரியாவில் தொடங்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் புளு கம்யூனிட்டி என்ற பெயரில் தீவிரவாத சிந்தனைகளுக்கு மக்களை ஆட்படுத்த பிரசாரம் மேற்கொண்டு, அதன்மூலம் மூளைச்சலவை செய்ய தீவிரவாத இயக்கங்கள் முயற்சி செய்து 
 வருவதாகக்கூறப்படுகிறது.
பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் சாதாரண மக்களையும் தீவிரவாதிகளாக மாற்ற பயங்கரவாதிகள் முயன்று வருவதாக எழுந்த புகாரை அடுத்து இது தொடங்கப்பட்டுள்ளது.
இதைத்தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இதுபோன்ற மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டவர்களை மீட்க அல்ஜீரியாவின் கான்ஸ்டண்டீன் நகரில் தனியார் தொண்டு நிறுவனத்தால் பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

திங்கள், 6 ஜூன், 2016

பஸ் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரிக்கு அன்பளிப்பு!

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரிக்கு கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பஸ் ஒன்று அன்பளிப்பாக பாடசாலை மாணவர்களிடம் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அலரி மாளிகையில் வைத்து வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன். உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண சபை அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 5 ஜூன், 2016

புதுக்குளம் சித்திவிநாயகரின் 16 வது மாபெரும் விளையாட்டு விழா ஆரம்பம்

வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் விளையாட்டுக் கழகத்தின் 68வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் 16 வது மாபெரும் விளையாட்டு விழா இன்று உற்சாகத்துடன் ஆரம்பமானது.
இந்த விழா கழகத்தின் தலைவர் திரு.பார்த்தீபன் தலைமையில் 04.06.2016 காலை 8.00 மணிக்கு கழக மைதானத்திலிருந்து கிளிநொச்சி பரந்தன் சந்தி வரையான இருவழி தூர (115 கிலோமீற்றர்) சைக்கிளோட்ட போட்டியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஏனைய போட்டிகள் கழக மைதானத்தில் இடம்பெற்றதைத் தொடர்ந்து மாலை பரிசளிப்பு விழா இடம்பெற்றது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>