வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக செல்லும் நோக்கில் இருந்ததாக கூறப்படும் 34 பேர் ராகம - தெல்பே - குருகுலாவ பகுதியில், ஹோட்டலொன்றில் தங்கியிருந்தபோது நேற்றிரவு மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 3 பெண்களும், 21 ஆண்களும் 4 சிறுவர்களும் 6 சிறுமிகளும் உள்ளடங்குவதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் யாழ்ப்பாணம் பிரதேசததை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை கடல் மாரக்கமாக அனுப்புவதற்கு அழைத்து வந்ததாக கூறப்படும் இருவரையும் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படத்தப்பட்டுள்ள குறித்த நபர்களை நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 49 பேர் இந்தியா, நாகை மாவட்டத்தின் வேளாங்கண்ணி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக