siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

கப்பல் வெடிப்பிற்கு பாதுகாப்பு விதிமுறை மீறல் காரணம்: ரஷ்யா


மும்பையில் கடந்த புதன்கிழமையன்று அதிகாலை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்தியக்கப்பற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் தமிழக வீரர் வெங்கட்ராஜூ உள்பட 18 பேர் இறந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்த கப்பலானது ரஷ்யாவில் பழுதுபார்த்து புதுப்பிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று இந்தியா வந்ததாகும்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ரஷ்ய துணை பிரதம மந்திரி டிமிட்ரி ரோகோசின், ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ரஷ்யாவில் 1997-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஐ.என்.எஸ். சிந்து ரக்‌ஷக் என்ற இந்திய கடற்படை கப்பலானது வெடித்து சிதறியது என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த கப்பலில் உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறேன்.
அந்த கப்பலானது சமீபத்தில்தான் ரஷ்யாவில் முழுமையாக பழுதுபார்க்கப்பட்டு அனுப்பப்பட்டதாகும். 15,000 கடல் மைல்களுக்கு மேல் அந்த கப்பல் பயணம் செய்துள்ளதால், இந்த விபத்திற்கு தொழில்நுட்பக்கோளாறு காரணமாக இருக்க முடியாது.
இதற்கான காரணம் குறித்து ஆராயப்படுகிற வேலையில், கப்பலில் உள்ள கருவிகள் காரணம் என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கவில்லை. இந்த விபத்துக்கு காரணம் தொழில்நுட்ப கோளாறு காரணம் என்று இந்தியா இதுவரை கூறவில்லை. பாதுகாப்பு விதிமுறைகள் மீறலே இந்த நீர்மூழ்கி கப்பல் விபத்துக்கான காரணமாக இருக்க முடியும்.
இந்த கப்பலில் பேட்டரிகள் ரீசார்ஜ் செய்யப்படுகிற பகுதியில் வெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. இந்த பகுதியானது கப்பலில் உள்ள அனைத்து பாதுகாப்பு கருவிகளுடனும் இணைக்கப்பட்டுள்ள மிகவும் பாதுகாப்பான பகுதியாகும். 18 கடற்படை வீரர்கள் இறந்திருக்க அஞ்சப்படுகிற இந்த விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக