தனது விடுமுறை வாசஸ்தலமான villa du Cap Nègre (Var) இற்கு விடுமுறைக்குச் சென்றுள்ள முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்சோலா சார்க்கோசிக்கு அதி உச்சப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர் பிரபலங்களின் பாதுகாப்புச் சேவையான (Service de protection des hautes personnalités) SPHP யின் சிறப்புப் படையினர் பத்துப் பேரும் 15 குடியரசுப் பாதகாப்புப் படை வீரர்களும் (CRS) ஓகஸ்ட் மாதம் முதல் நிக்சோலா சார்க்கோசிக்குச் சிறப்புப் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இதை உறுதி செய்த நிக்சோலா சார்க்கோசி முன்னைய ஜனாதிபதிகள் போல் தனக்கும் இந்தச் சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இச் சட்டமானது 1985ம் ஆண்டு பிரதமரின் ஒரு சுற்றறிக்கை மூலம் உள்துறை அமைச்சினால் நிறைவேற்றப்பட்டது. பிரபலமானவர்கள் வெளிவரும் போது அவர்களிற்கு ஏற்படக்கூடிய உயிராபத்தினைக் கருத்திற் கொண்டே இச்சட்டம் நடைமுறைப்படுத்ப்பட்டது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக