siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மக்கள்தொகை 35 மில்லியனை தாண்டியது

கனடாவில் மக்கள்தொகை 35 மில்லியனை தாண்டியுள்ளதாக புள்ளிவிபர அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.கனடாவின் புள்ளிவிபரவியல் மக்கள்தொகை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கனடாவில் மொத்த மக்கள்தொகை 35,158,300 என்று கணக்கிடப் பட்டுள்ளதாகவும், இது கடந்தாண்டை விட 404, 000 அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 1.2 சதவிகித அதிகரிப்பு, கடந்த 30 வருடங்களாக ஒரே மாதிரியாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு தேசிய அளவில் அல்பேர்ட்டாவில்...

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

ரூ. 2.50 கோடிக்கு விற்பனையான இந்தியரின் ஓவியம்

அமெரிக்காவில் இந்தியர் வரைந்த ஓவியம், அமெரிக்காவில் 2.54 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. கடந்த 18ம் திகதி மார்ட்டின் அண்டு கான்டெம்பொரரி சவுத் ஆசியன் ஆர்ட் நிறுவனம், நியூயார்க்கில் ஏற்பாடு செய்த கண்காட்சியில் நடைபெற்ற ஏலத்தில், இந்திய ஓவியரான பூபென் காகர் வரைந்த 'அமெரிக்க கணக்கெடுப்பு அதிகாரி' என்ற ஓவியம் 4 லட்சம் டொலருக்கு விற்பனையானது. ஆறு பேர், இந்த ஓவியத்தை வாங்க போட்டியிட்டதில் ஏறக்குறைய இரு மடங்கு விலைக்கு விற்பனையானது. இந்த ஏலத்தில்...

2 வயது சிறுவன் மாடியிலிருந்து தூக்கி ஏறியப்பட்டு கொலை

சீனாவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற மாகாணம் குவாங்ஸி ஷுயாங்.இங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 6–வது மாடியில் இருந்து 2 வயது சிறுவன் ஒருவன் வெளியே தூக்கி வீசப்பட்டான். இதனால் ரோட்டில் விழுந்த சிறுவனி்ன் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி மரணமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் பொலிஸர் அங்கு விரைந்து வந்து சிறுவனை வீசி கொலை செய்த நபரை கைது செய்தனர். கொலையாளின் பெயர் லூ என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறுவனின் தாயாருக்கும்,...

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

வேலை நிச்சயம்! கொமடி செய்தால்

  நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என, சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை கிடைப்பதற்கு உள்ள தகுதிகள் குறித்த ஆய்வு ஒன்றை, அமெரிக்காவின், மனித வள மேம்பாட்டு நிறுவனம் நடத்தியது. இதற்காக, இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மேலாளர்கள் மற்றும் மனித வள அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஒரே விதமான கல்வித் தகுதி படைத்த...

சனி, 14 செப்டம்பர், 2013

பல்கலைக்கழக மாணவர் விடுதி மீது தாக்குதல்

களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத சிலர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கன்னங்கர விடுதியினுள் நுழைந்த கும்பலொன்று மேற்படி தாக்குதலை நடத்தியுள்ளது. இதன்போது விடுதியின் ஜன்னல்கள்,கதவுகள், மாணவர்களின் மோட்டார் சைக்கிள்கள்,  கண்ணாடிகள் போன்றவற்றை சேதப்படுத்தியுள்ளனர். இத் தாக்குதலால் எவரும் காயங்களுக்குள்ளாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மேலும்...

திங்கள், 9 செப்டம்பர், 2013

விற்பனையில் களைகட்டிய பிள்ளையார் சிலைகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பிள்ளையார் சிலைகள், தோரணங்கள் மற்றும் பூஜை சாமான்கள் விற்பனை களை கட்டியுள்ளது. முழுமுதல் கடவுள் விநாயகப்பெருமானின் சதுர்த்தி விழாஇன்று கொண்டாடப்படுகிறது.                                                                                                                                   ...

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

வாகன விபத்து !கிளிநொச்சியில் 4 பேர் படுகாயம்

  கிளிநொச்சி பரந்தன்- முல்லைத்தீவு வீதியில் வானும் உழவு இயந்திரமும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்று காலை 10 மணிக்கு பூங்காவனம் சந்தியில் இடம்பெற்றுள்ளது விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்,{புகைப்படங்கள்} &nbs...