siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 29 நவம்பர், 2015

ஆள் கடலில் மூழ்கி இளைஞன் மரணம்

தொண்டமானாறு அக்கரை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வல்வெட்டித்துறை, இமையானன் பகுதியைச் சேர்ந்த சுதாகரன் சங்கீத்தன் (வயது 18) என்ற இளைஞன் நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளான். நேற்று வெள்ளிக்கிழமை கடலுக்கு குளிக்க சென்றிருந்த நிலையிலே குறித்த இளைஞன் அலையில் அடித்து  செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று சனிக்கிழமை (28) சடலத்தை மீட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது ...

புதன், 25 நவம்பர், 2015

எசமான் ஒருவரை அவரது நாய் 'சுட்டதால்' காயம்அடைந்துள்ளார் !

வேட்டைக்கு சென்ற ஒருவர் அவரது நாயால் 'சுட்டு' காயப்படுத்தப்பட்ட விநோத சம்பவம் பிரான்சில்  நடந்திருக்கிறது. தென்மேற்கு பிரான்ஸ் பகுதியில் வேட்டையாடிக்கொண்டிருந்த ஒருவரை அவரது நாய் 'சுட்டு' காயப்படுத்திவிட்டது. பிரான்ஸின் மெஸ்ப்ளீட் என்ற நகருக்கருகே, அவர் தன்னுடைய வேட்டைத் துப்பாக்கியை ஒரு மரத்தின் மீது சாய்த்து வைத்துவிட்டு, தான் சுட்டு வீழ்த்திய பறவை ஒன்றை எடுக்கச் சென்றிருக்கிறார். அப்போது அவருடைய நாய் அந்தத் துப்பாக்கியை தள்ளிவிட்டிருக்கிறது  போலத்தெரிகிறது  ....

திங்கள், 23 நவம்பர், 2015

இறக்கும் குழந்தைகளுக்கு உடனே பிறப்பு பதிவு கட்டாயம்?

பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளின் பிறப்புகளை பதிவு செய்வதை கட்டாயம் என அறிவித்து சுகாதார அமைச்சு அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளுக்கு சுற்றறிக்கை  அனுப்பியுள்ளது. பிறந்த குழந்தை இறந்தால், அது குறித்து உடனடியாக பிரதேசத்தில் உள்ள பதிவாளர் அல்லது உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அமைச்சு வைத்தியசாலைகளுக்கு ஆலோசனை  வழங்கியுள்ளது. பிறக்கும் குழந்தை இறப்புகள் குறித்து இதுவரை சில பிரதேசங்களில் மாத்திரமே பதிவு செய்யப்பட்டு...

ஞாயிறு, 22 நவம்பர், 2015

பெண் ஒருவர்க்கு முகமாற்று அறுவை சிகிச்சைசாதனை?

அகோர முகம் படைத்த போலந்து பெண் ஒருவருக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செய்து அழகிய முகமாக மாற்றி மருத்துவர்கள் பெரிய சாதனை புரிந்துள்ளனர். போலந்து நாட்டின் வாழும் 26 வயது பெண் Joanna என்பவர். இவருக்கு பிறவியிலேயே neurofibromatosis என்ற நோய் தாக்கியதால் அவருடைய முகம் நாள் ஆக ஆக அகோரமாக மாறிக்கொண்டே வந்தது. பிறரிடம் பேசுவதற்கும், சாப்பிடுவதற்கும் கூட மிகுந்த கஷ்டப்பட்டார். எனவே அவருடைய முகத்தை 80% மாற்றி வேறு முகத்தை பொருத்த மருத்துவர்கள்  முடிவு...

வெள்ளி, 20 நவம்பர், 2015

இரு இளைஞர்கள் தாடிவளர்த்ததால் பொலிசாரால் கைது?

யாழில் இரு இளைஞர்கள் தாடியுடன் வீதியில் நடந்து சென்றமையால் அவர்களை கைது செய்து மானிப்பாய் பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் மகன் மற்றும் மகனின் நண்பர் ஆகிய  இரு இளைஞர்களுமே அவ்வாறு கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு இலக்கானவர்கள் ஆவார்கள். இச் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவிக்கையில், நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் எனது மகன் உட்பட இரு இளைஞர்கள் மானிப்பாய் பகுதிக்கு...

புதன், 18 நவம்பர், 2015

சிறந்த உற்பத்தியாளர்களுக்கான பட்டமளிப்பு விழா

அமெரிக்க அரசின் யு.எஸ் எயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் புரைலர் கோழி முகாமைத்துவ பயிற்சி திட்டத்தின் கீழ் சிறந்த உற்பத்தியாளர்களுக்கான பட்டமளிக்கும் விழா நேற்று மாலை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் நடைபெற்றது. யு. எஸ். எயிட்டின் வாழ்வாதார அபிவிருத்தி உதவி வழங்கும் சொலிட் திட்டத்தில் கீழ் ஓட்டமாவடி, மாங்கேணி, காத்தான்குடி,  பாலமுனை ஆகிய  பிரதேசங்களில் புரைலர் கோழி வளர்புத் திட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி புரைலர்...

வெள்ளி, 13 நவம்பர், 2015

பதுங்கியிருந்த 450 மில்லியன் டொலர் வெளியே வந்தது!

சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்த 450 மில்லியன் டொலர் பணம் இலங்கை வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சுவிஸ்  வங்கிகளில்  வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை மீள இலங்கைக்கு கொண்டு வருமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கணக்கு உரிமையாளர்கள், இலங்கை வங்கிகளில் சுமார் 450 மில்லியன் டொலர் பணத்தை வைப்புச்  செய்துள்ளனர். இலங்கையர்கள் மட்டுமன்றி...

திங்கள், 2 நவம்பர், 2015

யாழ் நல்லூர் முருகன் ஆலய முன்றலில் காட்சி கொடுத்த மயில்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக முருகப் பெருமானின் வாகனமான மயில்01.11.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் காட்சி கொடுத்தது. ஆலயத்துக்கு வருகை தந்த அடியவர்கள்,தென்னிலங்கையைச் சேர்ந்த மக்கள்,வெளிநாட்டவர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.பலரும் தங்கள் புகைப்படக் கருவிகள் மற்றும் கைபேசிகளில் புகைப்படம் எடுத்துச் சென்றனர். ஆலயத்தி வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண் மயிலானது கடந்த சில...