வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக முருகப் பெருமானின் வாகனமான மயில்01.11.2015
ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் காட்சி கொடுத்தது.
ஆலயத்துக்கு வருகை தந்த அடியவர்கள்,தென்னிலங்கையைச் சேர்ந்த மக்கள்,வெளிநாட்டவர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.பலரும் தங்கள் புகைப்படக் கருவிகள் மற்றும் கைபேசிகளில் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
ஆலயத்தி வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண் மயிலானது கடந்த சில நாட்களாக திறந்து விடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.ஆனால் ,நீண்ட நாட்களின் பின்னர் ஆலய
முன்றலில் குறித்த மயிலானது காட்சி கொடுப்பதாகவும் ,இவ்வாறான
காட்சியைக் காண்பது அபூர்வமெனவும் நாள்தோறும் ஆலயத்துக்கு வருகை தரும் அடியவர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை,குறித்த மயிலைச் சீண்ட முனைபவர்களையும் ,வேடிக்கை பார்த்த சிலரையும் இந்த மயில் துரத்திக் கொத்தியதையும் அவதானிக்க முடிந்தது.ஆன போதும் நல்லூரானைத் தரிசிக்க வந்த அடியவர்களுக்கு மயிலால் தொல்லை எதுவும் ஏற்படவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக