மது போதையில் பயணிகள் பஸ் செலுத்திச் சென்ற பஸ் சாரதியை புதன்கிழமை (19.10.2016) அன்று மாலை அச்சுவேலி பகுதியில் கைது செய்துள்ளதாக அச்வேலி பொலிஸார் தெரிவித்தனர்.
அச்சுவேலி - யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்ஸின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டார். வீதிச் சோதனையில் நின்றிருந்த பொலிஸார், இவரிடம் சோதனை நடத்தியபோது, மதுபோதையில் இருந்தமை தெரியவந்தது.
கைதான சாரதிக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
பொலிஸார் கூறினர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக