siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 27 டிசம்பர், 2016

அமரர் துரைசிங்கம் மகேந்திரன் 31ம் , நினைவஞ்சலி (அந்தயேட்டி)

பிறப்பு : 8 ஓகஸ்ட் 1966 — இறப்பு : 28 நவம்பர் 2016
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைசிங்கம் மகேந்திரன் (மகேன்)  அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், நாகரத்தினம்(செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரகத்தி, கனகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,
கேதாரகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன், மதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயலக்சுமி(கிளிநொச்சி), பன்னீர்ச்செல்வம்(Selvam Transporte- சுவிஸ்), மோகனாதேவி(நயினை), நாகேஸ்வரி(ஜெர்மனி), பரமேஸ்வரி(பிரான்ஸ்), இரவீந்திரன்(சுவிஸ்), யோகேஸ்வரி(சுவிஸ்), ஜெகதீஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியேஸ்வரி(ஜெர்மனி), கணேசலிங்கம்(ஜெர்மனி), கருணலிங்கம்(யாழ்), குகணேஸ்வரி(நயினை), சண்முகலிங்கம்(சுவிஸ்), புஸ்பராணி(கொலண்ட்), கலைச்செல்வி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
மண்ணினில் மகிழ்ந்து 
மாண்புடன் வாழ்ந்த மகேந்திரன் 
விண்ணிலே விடையேறிய
பரமன் பாதம் பணிந்து- இறையாகி 
கண்ணினால் இவ்வுலக காட்சிகள்
அனைத்தும் காண்கிறான்
வெந்த புண்ணிலே வேல் பாய்ந்த
உணர்வோடு நிற்கின்றோம்- அவர் பிரிவால் 
பண்ணிசைத் தேவார பதிகம் பாடித்துதித்து
நினைவுகள் சுமந்த கண்ணீரை 
பூக்களாய் தூவி தூவி காணிக்கை செய்கின்றோம்
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
அன்னாரின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டவர்களுக்கும், மலர்வளையம், துண்டுபிரசுரம், தொலைபேசி, முகநூல் மூலமாகவும் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், வேறு வழிகளில் பங்களிப்பு செய்தவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தயேட்டிக்கிரியை 28-12-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Schützenhaus, Rumlangerstrasse, 8156 Oberhasli, Swiss எனும் முகவரியில் நடைபெறும்.
தகவல்
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்
தொடர்புகளுக்கு
கேதாரகெளரி(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41434110183
பன்னீர்செல்வம்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796795922
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக