siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 29 டிசம்பர், 2016

முதன்முறையாக ஏலியன்ஸை தொடர்பு கொள்ளபோகும் பூமி:?

கிரக வாழ்க்கைக்கு வெளியே தொடர்பு கொள்ள மனிதகுலம் முதல் முறையாக நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக அறிவியல் ஆய்வியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளி ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக ஏலியன்ஸின் சிக்னல் கண்டுபிடிக்க விண்ணில் ஆய்வு செய்து
 வருகின்றனர்.
இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோ சார்ந்த அமைப்பான Extra Terrestrial Intelligence (METI) ஏலியன்ஸை முதல் முறையாக தொடர்பு கொண்டு ஹலோ சொல்ல திட்டமிட்டு களமிறங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் தூரத்தில் இருக்கும் கிரங்களுக்கு உரையாடல் அனுப்ப தொடங்கவுள்ளது. இந்த செய்திகள் மீண்டும் மீண்டும் 2018 இறுதிக்குள் ரேடியோ அல்லது லேசர் சிக்னல் வழியாக 
அனுப்பப்படும்.
METIயின் தலைவரும், SETIயின் முன்னாள் இயக்குனருமான Douglas Vakoch கூறியதாவது, பல தலைமுறையினாருக்காக இந்த பரிமாற்றத்தை தொடங்க வேண்டும் என்றால், நாம் காற்று மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த தி்ட்டம் சிறந்த உரையாடலுக்கான தொடக்கத்தை உருவாக்க முயற்சிக்கும் என நம்பிக்கை 
தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக