சலூனில் திருட முற்பட்ட சிறுவர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் அரியாலை மாம்பழம் சந்தியில் உள்ள சலூன் ஒன்றில், இன்று (புதன்கிழமை) நண்பகல் வேளையில் குறித்த சிறுவர்கள் இருவரும் திருட முற்பட்டுள்ளனர். இதன் போது சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து இருவரும் சம்பவ இடத்திலேயே வைத்துக் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட சிறுவர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அதே இடத்தில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் 16 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்றினையும் 50 சி.டி.க்களையும் கடந்த காலங்களில்
திருடியுள்ளனர்.
நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த 10 வயது மற்றும் 11 வயது சிறுவர்கள் இருவரையும் சிறுவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றார்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக