கிளிநொச்சி – பூநகரி, வாடியடி பிரதேசத்தை அண்மித்த பகுதியில் துண்டுதுண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பூநகரியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 62 வயதுடைய கந்தையா சபாரத்தினம் என்ற விவ சாயியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா – குருமன்காடு பகுதியில் வசித்துவரும் பூநகரியைச் சொந்த இடமாகக் கொண்ட கந்தையா சபா ரத்தினம் என்ற விவசாயி, கடந்த 28 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் பூநகரிக்கு சென்ற நிலையில் தனது கணவன் காணாமல் போயுள்ளதாக அவரது மனை வியால் பூநகரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பிர காரம், துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட பின்னர் குழியொன்றில் புதை க்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் கனேடிய குடியுரிமை உள்ள பூநகரியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட சடலம் குறித்த விசாரணை கிளிநொச்சி நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவ பால சுப்பிரமணியம் முன்னிலையில் இடம்பெற்றதைத் தொடர்ந்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளி நொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு
எடுத்துச் செல்லப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸாருடன் இணைந்து கிளிநொச்சி குற்றத் தடயவியல் பொலிசார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக