44re443ewநெட்பிலிஸ் மற்றும் அமெசன் ஆகிய நிறுவனங்களின் தொலைக்காட்சி சேவையினை போன்ற தொலைக்காட்சி சேவை ஒன்றினை அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம்
தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான தகவல்களின் அடிப்படையில் அந் நிறுவனம் உரிமங்கள் கொண்ட வீடியோக்களை உருவாக்கக்கூடிய சில நிறுவனங்கள், தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு
வருகின்றது.
மேலும் நாடகங்கள், விளையாட்டுக்கள் போன்றவற்றினை அடிப்படையாக கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இந்த திட்டத்தின் ஊடாக அறிமுகம் செய்வதற்கு பேஸ்புக் நிறுவனம்
எண்ணியுள்ளது.
எனினும் இச்சேவையினை பேஸ்புக் கணக்கினூடாக பார்த்து மகிழ முடியுமா என்ற தகவல் குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
விரைவில் மேலதிக தகவல்கள் வெளியாகலாம் என
எதிர்பார்க்கப்படுகின்றது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக