siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 28 ஜூன், 2017

நீதவான் சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு வழக்கு ஒத்தி வைப்பு!!

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி வரை ஒத்தி  வைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று மல்லாகம் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சுன்னாகத்திலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை குறித்துப் பொதுச் சுகாதாரப் பரிசோதர்கள்,...

வெள்ளி, 23 ஜூன், 2017

மாணவர்கள் மஞ்சள் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்

மட்டக்களப்பு – கொழும்பு வீதியில் இரு பேருந்துகள் முந்திச் செல்ல எத்தனித்த போது இடம்பெற்ற விபத்தில் மஞ்சள் கடவையை கடக்க முயன்ற மாணவர்கள் மயிரிழையில் உயிர்த் தப்பியுள்ளனர். குறித்த விபத்து இன்று காலை முறக்கொட்டான்சேனை இராம கிருஷ்ண மிஷன் வித்தியாலயத்திற்கு முன்னால் உள்ள மஞ்சள் கடவையில் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தொன்றும், தனியார் பேருந்தொன்றும் முந்திச்செல்ல எத்தனித்த வேளையிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது,...

வெளிநாட்டுக்கடவுச்சீட்டை 100 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள வாய்ப்பு

அனர்த்த நிலைமையிலான பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த விலையில் கடவுச்சீட்டினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை  எடுத்துள்ளது. வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் வெளிநாட்டு கடவுச்சீட்டு காணாமல் போயிருந்தால், புதிதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பிரதேச செயலாளர் பரிந்துரையின் படி, விண்ணப்பதாரர் செலுத்த வேண்டிய கட்டணங்களை குறைந்த விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியின்...

வியாழன், 22 ஜூன், 2017

மரண அறிவித்தல் திரு செல்லையா பரந்தாமன் 20-06-17

 இறப்பு : 20 06. 2017 அல்வாய் கிழக்கு அத்தாயைப் பிறப்பிடமாகவும், ,வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பரந்தாமன் அவர்கள் 20-06-2017 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்லையா தெவ்வனை தம்பதிகளின் அன்பு மகனும்,  பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,  பாலகிருஸ்ணன் , சிவஞானம் ,நேசரத்தினம் , சந்திரா ,இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரனும்  ஜெயபாலசந்திரன் (சுவிஸ் ) காலஞ்சென்ற ஜெயபாலினி , பாவனி (ஜேர்மனி ) ஜெயக்குமார்...

திங்கள், 19 ஜூன், 2017

மரண அறிவித்தல் திரு பொன்னர் தங்கராசா.18.06.17

பிறப்பு : 28 யூன் 1940 — இறப்பு : 18 யூன் 2017 யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னர் தங்கராசா அவர்கள் 18-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னர், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும், தயாவதி, குணராஜன், அருள்குமரன், கவியரசன்(கனடா), காலஞ்சென்ற கவீந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், குணரட்ணம்,...

திங்கள், 5 ஜூன், 2017

மரண அறிவித்தல் திரு கார்த்திகேசு அருளம்பலம்

தோற்றம் : 20 ஒக்ரோபர் 1928 — மறைவு : 26 மே 2017 யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி, ஊரெழு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு அருளம்பலம்(அருணாசலம்)  (Marketing Department - Colombo)அவர்கள் 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், முத்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ஞானபூபதி அவர்களின் அன்புக்...

சனி, 3 ஜூன், 2017

கதலி வாழைப்பழங்களின் விலை யாழில் திடீர் சரிவு

   யாழ். மாவட்டத்தில் கதலி வாழைப்பழத்தின் விலையில் இன்று(03) திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தின் முக்கிய சந்தையான திருநெல்வேலி மற்றும் சுன்னாகம், மருதனார்மடம் உள்ளிட்ட சந்தைகளில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 120 ரூபா முதல் 130 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று(03) ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 40 ரூபா தொடக்கம் 60 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக  தெரிவிக்கப்படுகின்றது. மேலும்...

வெள்ளி, 2 ஜூன், 2017

யாழில் மட்டும் வரட்சியால் 1 இலட்சம் பேருக்கு மேல் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் வரட்சியால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர்  மேற்படி தெரிவித்துள்ளார்.கடந்த வருடம் மழைவீழ்ச்சி குறைவடைந்ததன் விளைவாக வேலணை, ஊர்காவற்துறை,  காரைநகர், மருதங்கேணி மற்றும் கடற்கரையை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த சுமார் 33 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேர்...

இன்று கிளிநொச்சியில் 8 மணித்தியாலங்களுக்கு மின் தடை!

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பிரதேசங்களில் இன்று மின் தடை ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காகவே இந்த மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை இந்த மின் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கிளிநொச்சி, ஐயபுரம், நாகப்படுவான், பல்லவராயங்கட்டு, வேராவில், கிராஞ்சி, வலைப்பாடு, குமுழமுனை, கரியாலைப்படுவான்,...

வியாழன், 1 ஜூன், 2017

இன்று முதல் கட்டுநாயக்க சர்வதேச விமன நிலையத்தில் புதிய பாதுகாப்பு !

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமன நிலையத்தில் இன்று முதல் புதிய பாதுகாப்பு நடைமுறை அமுலாகிறது. அதற்கமைய விமான நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இந்த நடைமுறை செயற்படுத்தப்படுவதாக விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார் புதிய பாதுகாப்பு நடைமுறைக்கமைய விமான பயணி ஒருவர் தங்கள் கைப்பையினுள் கொண்டு செல்ல கூடிய திரவ வகை, ஸ்ப்ரே வகை மற்றும் ஜெல் வகைகளின் அளவுகளை குறைப்பதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீர்,...

தொடர்ந்து இதை 3 மாதம் சாப்பிட்டால் நோய்கள் மறையுமாம் ?

அரிக்காவில் சுமார் 70% குழந்தைகள் வைட்டமின் டி குறைபாட்டினால் அவஸ்தைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உடலின் அத்தியாவசிய செயல்பாட்டிற்கு வைட்டமின் டி மிகவும் இன்றியமையாதது. இது பல நோய்களான புற்றுநோய்,  இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும். Take Vitamin D For 3 Months And All Diseases Will Disappear! VIDEO : Amla Juice and its 5 Health Benefits in Summer Amla Juice and its 5 Health Benefits in Summer Lifestyle...