மட்டக்களப்பு – கொழும்பு வீதியில் இரு பேருந்துகள் முந்திச் செல்ல எத்தனித்த போது இடம்பெற்ற விபத்தில் மஞ்சள் கடவையை கடக்க முயன்ற மாணவர்கள் மயிரிழையில் உயிர்த் தப்பியுள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை முறக்கொட்டான்சேனை இராம கிருஷ்ண மிஷன் வித்தியாலயத்திற்கு முன்னால் உள்ள மஞ்சள் கடவையில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தொன்றும், தனியார் பேருந்தொன்றும் முந்திச்செல்ல எத்தனித்த வேளையிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, வீதியைக் கடந்து கொண்டிருந்த மாணவர்கள் வீதியிலிருந்து விலகிச் சென்று ஆபத்திலிருந்து தப்பிக் கொண்டுள்ளதுடன், குறித்த நேரத்தில் பாடசாலை மஞ்சள் கடவையில் பொலிஸார் எவரும் கடமையில் நின்றிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து பாடசாலை மஞ்சள் கடவைக்கு அருகிலுள்ள கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளதுடன், குறித்த இரு பேருந்துகளும் ஏறாவூர் பொலிஸாரால், பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்மைக்காலமாக பாடசாலை தினங்களில் பாடசாலைக்கு அண்மித்த பகுதிகளிலுள்ள மஞ்சள் கடவைகள் முன்னால் வீதிப்போக்குவரத்து பொலிசார் உரிய நேரத்து கடமைக்கு வருவதில்லை எனவும், இவ்வாறான விபத்துக்களை குறைப்பதற்குரிய வேலைத்திட்டங்களை செய்வதில்லையெனவும் பொதுமக்கள் குற்றம்
சாட்டுகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக