siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 3 ஜூன், 2017

கதலி வாழைப்பழங்களின் விலை யாழில் திடீர் சரிவு

  
யாழ். மாவட்டத்தில் கதலி வாழைப்பழத்தின் விலையில் இன்று(03) திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தின் முக்கிய சந்தையான திருநெல்வேலி மற்றும் சுன்னாகம், மருதனார்மடம் உள்ளிட்ட சந்தைகளில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 120 ரூபா முதல் 130 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று(03) ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 40 ரூபா தொடக்கம் 60 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் யாழில் தற்போது வெள்ளரிப்பழம், பலாப்பழம், மாம்பழம் போன்ற பழ வகைகளின் பருவகாலம் ஆரம்பமாகியுள்ளமையால் இந்தப் பழ வகைகளைக் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் அதிக ஈடுபாடு காட்டி 
வருகின்றனர்.
சந்தைகளில் வாழைக்குலைகளின் வரத்துச் சடுதியாக அதிகரித்துக் காணப்படுகின்றமையுமே இந்தத் திடீர் விலை சரிவுக்குக் காரணமென வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
யாழ். நீர்வேலி, கோப்பாய், உரும்பிராய் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாழைக்குலைகள் அதிகளவில் திருநெல்வேலிப் பொதுச் சந்தைக்கு எடுத்து வரப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக