siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 28 ஜூன், 2017

நீதவான் சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு வழக்கு ஒத்தி வைப்பு!!

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி வரை ஒத்தி 
வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று மல்லாகம் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சுன்னாகத்திலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை குறித்துப் பொதுச் சுகாதாரப் பரிசோதர்கள், பொலிஸார், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இணைந்து மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த மே மாதம் 30ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது சுன்னாகத்திலும், அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலப்பதற்குக் காரணமான மின் உற்பத்தி நிறுவனத்தைக் கண்டறிந்து குறித்த நிறுவன அதிகாரிகளைச் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரூடாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு மல்லாகம் நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
எனினும், இன்றைய தினம் நீதவானின் உத்தரவுக்கமைய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு மன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை.
இன்றைய தினம் சுன்னாகம் நொதேர்ன் பவர் மின்னுற்பத்தி நிறுவனம் சார்பாக மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி டிலான் பிலிப்ஸ் சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பான வழக்குகள் மேல்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நிலுவையிலுள்ளமையால் மல்லாகம் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்குமாறு நீதவானிடம் கோரினார்.
இதன் அடிப்படையிலேயே குறித்த வழக்கு விசாரணையை நீதவான் ஒத்தி வைத்தார். மேலும், நீர் மாசு தொடர்பான தற்போதைய நிலைமைகளை ஆராய்ந்து மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுற்றுச்சூழல் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு நீதவான் இதன்போது உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக