siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 2 ஜூன், 2017

யாழில் மட்டும் வரட்சியால் 1 இலட்சம் பேருக்கு மேல் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் வரட்சியால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் 
மேற்படி தெரிவித்துள்ளார்.கடந்த வருடம் மழைவீழ்ச்சி குறைவடைந்ததன் விளைவாக வேலணை, ஊர்காவற்துறை,
 காரைநகர், மருதங்கேணி மற்றும் கடற்கரையை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த சுமார் 33 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரச அதிபர் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதேச செயலகங்கள் ஊடாக குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்
 குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 6 புதிய குடிநீர் தாங்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குடிநீர் விநியோக வாகனங்களின் சாரதிகளுக்கான நிதியும் எரிபொருளும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்
 தெரிவித்துள்ளார்.
நாட்டின் தென்பகுதியில் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை யாழ்.மாவட்ட செயலகம் ஆரம்பித்துள்ளதாகவும் தம்மோடு இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புவோர் மாவட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி உதவுமாறும் கேட்டு கொண்டுள்ளார்
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக