நாத்தாண்டியா – துன்கன்னாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.நேற்று (07) இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சிறிய ரக லொறி ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில்
மீகஹகிவுல பகுதியை சேர்ந்த 54 வயதுடைய தாயாரான சந்திரிகா சேனரத் மெனிகேஇ 21 வயதுடைய மகளான அதிகாரி ஆராச்சிகே அஹிம்சா துலாஞ்சனி ஆகியோரே இவ்வாறு
உயிரிழந்துள்ளனர்.
நாத்தாண்டியாவில் உள்ள ஒரு கல்வி நிலையத்திலிருந்து மகளை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தாயார் அழைத்து வந்தபோதுஇ பின்புறமாக வந்த வாகனம் அவர்களை
மோதித்தள்ளியது.காயமடைந்த இருவரும் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் உயிரிழந்தனர்.விபத்தில் இறந்த பெண் பிபில்தெனிய மத்திய கல்லூரியில் இசை ஆசிரியை ஆவார்.மராவில போலிஸ் போக்குவரத்து பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றது¨
0 கருத்துகள்:
கருத்துரையிடுக