நாளையிலிருந்து ஏப்ரல் 20ஆம் திகதி வரை பாடசாலைகள் அனைத்தும் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 வரை இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு ஆனந்த கல்லூரியின் முன்பாக இன்று குழப்பமான நிலைமை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக 12.03.20.இன்று முற்பகல் தகவல் வெளியாகியிருந்தது.இது குறித்து கல்வி அமைச்சில் விசேட ஊடக சந்திப்பு நடத்தப்பட்டு வருகிறது.அதில் வைத்தே எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 வரை
இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் டளஸ்
அழகப்பெரும அறிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பீதியை அடுத்து, பொதுமக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக இந்த மூடிவு எடுக்கப்பட்டுளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக