siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 30 ஜூன், 2020

உடுவில்பாடசாலையொன்றின் முன்மாதிரியான செயற்பாடுகள்

நாட்டில் கொரோனா அபாயம் தற்காலிகமாக ஓய்ந்துள்ள நிலையில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகவிருக்கின்றன. இதற்காக பல்வேறு சுகாதார வேலைத் திட்டங்களை எமது  அரசாங்கமானது நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றது.பாடசாலை மாணவர்களின்  சுகாதாரப் பாதுகாப்பை முதற்கொண்டு எமது யாழ் மாவட்டத்திலும் பெரும்பாலான பாடசாலைகளில்  ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.  இந்த வகையில், யாழ் உடுவில் மகளிர்  கல்லூரி...

புதன், 24 ஜூன், 2020

இந்தியாவில் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

இந்தியாவில் அதிகாலையில் வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சனா (17). இவர் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அஞ்சனாவுக்கு  பனிரெண்டாம் வகுப்பு கிரேட் தேர்வு நடக்கவிருந்தது.இதையடுத்து ஞாயிறு இரவு முழுவதும் அவர் படித்து கொண்டிருந்தார். பின்னர் திங்கள் அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து...

செவ்வாய், 23 ஜூன், 2020

சுன்னாகத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கைதான நபர்கள்

  யாழ் சுன்னாகம் பகுதியில் நண்பர்கள் இருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய போது, சட்டவிரோத கூட்டத்தைக் கூடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட 24 பேரையும் பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம்.23-06-20 இன்று உத்தரவிட்டது. அத்துடன் பிள்ளைகளை செல்லமாக வளர்த்தால் செல்லமாகவே வீட்டில் வைத்திருக்க வேண்டும். வெளியில் குற்றச்செயல்களில் ஈடுபடவிட்டால் நீதிமன்றம் கட்டுக்காவலில் வைக்கவேண்டிய நிலை...

யாழ் கோப்பாயில் இராணுவம் நிர்மானித்த வீடு கையளிப்பு

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் வறிய குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் புதிய வீடு நிர்மாணித்து இன்று (23-06-20) கையளிக்கப்பட்டது. கோப்பாய் பகுதியில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதி பங்களிப்பில், இந்த வீடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ருவான் வணிகசூரியவினால்  கையளிக்கப்பட்டது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

திங்கள், 22 ஜூன், 2020

மன்னார் செஞ்சிலுவை சங்க கிளை செயலாளர் தற்கொலை

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கிப் பயணித்த புகையிரதத்திற்கு முன் பெரியட்டு 41 ஆவது மைல் கல்லுக்கு அருகில் உள்ள புகையிரத வீதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை புகையிரதத்திற்கு  முன் பாய்ந்து மன்னாரை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை  செய்து கொண்டுள்ளார்.இவ்வாறு  தற்கொலை செய்தவர் சமூக சேவையாளரும்,இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளையின் செயலாளராக கடமையாற்றிய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆ.ரகு சங்கர் (43) எனத் தெரிய வந்துள்ளது. இன்று...

நாட்டு மக்களுக்கு பெருமகிழ்ச்சிச் செய்தி..கொரோனா தொற்றாளர்கள் இன்று இல்லை

இலங்கையில், கடந்த 48 மணி நேரத்தில் புதிய கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளங்காணப்படவில்லை. இந்நிலையில், இறுதியாக அடையாளங்காணப்பட்ட 1950 பேர்  மாத்திரமே இதுவரை கொரோனா தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.இதேவேளை  கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,498 ஆக அதிகரித்துள்ளது.தற்போது அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளில் 441 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.இதேவேளை , 25...

அம்பாறை மாவட்டத்தில் காலை கரை ஒதுங்கிய பாரிய மீன்கள்

அம்பாறை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் இன்றையதினம் காலை பாரிய மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதில் பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோமாரி – 2 பிரதேசத்தில் அரியவகை நீல திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதை பிரதேச வாசிகள் அவதானித்து அப்பகுதி கடற்படையினருக்கு  அறிவித்துள்ளனர். இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த கடற்படையினர் கரை ஒதுங்கிய மீனை பார்வையிட்டு மேலதிக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதே வேளை அம்பாறை மருதமுனை...

ஞாயிறு, 21 ஜூன், 2020

கொரோனாத் தொற்று சிங்கப்பூர் சிறையிலுள்ள இலங்கையருக்கு உறுதியானது

சிங்கப்பூரில் சிறையிலிருந்த இலங்கையைச் சேர்ந்த 21 வயது இளைஞர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.சமூக நுழைவு அனுமதி அட்டையை வைத்திருந்த அவர், இம்மாதம்,06-06-20,ஆம் திகதியிலிருந்து சாங்கி சிறையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.கிருமிப் பரவல் தொடர்பான எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு  முன்னர், அவர் சிங்கப்பூருக்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.6ஆம் திகதி சிறையில் அடைக்கப்பட்ட அவர் மற்ற கைதிகளிடமிருந்து 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்பட்டிருந்தார்.அவருடன்...

சனி, 20 ஜூன், 2020

சூரிய கிரகணம். கிருமிகள் அதிகம் பெருகும் வாய்ப்பு.மக்களே அவதானம்

நாளை 21-06-2020.சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவது தான் சூரியகிரகணம். இந்த சம்பவமானது அமாவாசை அன்று மட்டுமே நிகழும். மேலும், நிலா சூரியனை மறைத்து, பின்னர் சூரியன் வெளியே வரும். இந்த கிரகணமானது பல நாடுகளில் ஏற்படும். அப்போது வானிலை மேகமூட்டம் இன்றியிருந்தால் மக்கள் இந்த கிரகணத்தை காணலாம். இந்நிலையில் இங்குசூரிய கிரகணத்தை பொறுத்தவரை பல்வேறு நம்பிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன .இவை அனைத்தும் ஆயுர்வேத முறைப்படி...

வெள்ளி, 19 ஜூன், 2020

மரண அறிவித்தல் திருமதி தம்பு பூரணம்18-06-20

 மறைவு : 18-06-2020 யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி மேற்கு தலங்காவற் பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட தம்பு பூரணம் அவர்கள் 18-06-2020 வியாழக்கிழமை  அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி யோகம்மா  தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பு அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சந்திரசேகரன், இந்திராதேவி, ஞானசேகரன், குணசேகரன், ராசசேகரன், காலஞ்சென்ற மனோகரன், சிவனேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு...

புதன், 17 ஜூன், 2020

விபத்தில் உயிரிழந்த யாழ் மாநகரசபை பணியாளரின் குடும்பத்திற்கு நிதியுதவி

நேற்று உயிரிழந்த யாழ் மாநகரசபையின் தீயணைப்பு வீரரின் குடும்பத்திற்கு சக பணியாளர்கள் நிதி திரட்டி வழங்கியுள்ளனர்.யாழ் மாநகரசபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் நேற்று (16-06-20) வடமராட்சி கிழக்கிற்கு தீயணைப்பு பணிக்கு சென்றபோது, நீர்வேலி பகுதியில் விபத்திற்குள்ளானது.இதில் அரியரட்ணம் சகாயராஜா (37) என்பவர் உயிரிழந்தார்.அவர் உயிரிழந்ததையடுத்து  நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மனைவி, குழந்தைகளிற்கு உதவும் முகமாக, யாழ் மாநகரசபையின் பணியாளர்கள்.17-06-20....

திங்கள், 15 ஜூன், 2020

மின்னேரிய முகாமில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 7 பேர் வீடுகளுக்கு

மின்னேரிய இராணுவ முகாமில் வவுனியாவை சேர்ந்த 7 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று (12) காலை வவுனியா பொலிஸ் நிலையத்தினூடாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.மின்னேரிய இராணுவ முகாமில் இந்தியாவிலிருந்து வருகை  தந்தவர்கள் உட்பட வவுனியாவை  சேர்ந்த 7 பேர் கொவிட் 19 கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 14 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.அவர்கள் இன்றைய தினம் அவர்களது தனிமைப்படுத்தலை நிறைவு  செய்து வவுனியா பொலிஸ் நிலையத்தின்...

கனடாவில் குரும்பசிட்டியை சேர்ந்த ஒருவர் மர்மமான முறையில் கொலை

யாழ்.குரும்பசிட்டிப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கனடாவில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.  13-06-20.சனிக்கிழமை மார்க்கம் நகரில்  45 வயதான மதன் மகாலிங்கம் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அறிவித்த யோர்க் பிராந்திய பொலிஸார், அது தொடர்பான விசாரணைகளை  மேற்கொண்டனர். இந்நிலையில், அவர் கொலை செய்யப்பட்டதாக யோர்க் பொலிஸார்.14-06-20. அன்று  அறிவித்துள்ளனர். கடந்த 06ஆம் திகதி...

ஞாயிறு, 14 ஜூன், 2020

யாழில் நீர் இறைக்கும் இயந்திரத்தை பீடி பிடித்தபடி இயக்கிய இளைஞன் பலி

புகைபி‍டித்துக்கொண்டு நீர் இறைக்கும் இயந்த்திரத்தை இயக்கும் போது தீக்காயத்திற்குள், உள்ளான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் சுன்னாகம் கந்தரோடை பகுதியை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சுன்னாகம் கந்தரோடையில் விவசாயம் செய்து வரும் குறித்த இளைஞர் 31 ஆம் திகதி தனது தோடடத்திற்கு நீர் இறைப்பதற்காக நீர் இறைக்கும் இயந்த்திரத்தை தோளில் சுமந்து சென்றுள்ளார். அப்போது இயந்திரத்தில்...

செவ்வாய், 9 ஜூன், 2020

கொரோனா தொற்று இந்திய வியாபாரிக்கு உறுதி-யாழில் 13 பேருக்கு பரிசோதனை.

இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இணுவில் மற்றும் ஏழாலைப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்துவதற்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.குறித்த 13 பேருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனைகளின்  முடிவுகள் .09-06-20.இன்று  (செவ்வாய்க்கிழமை) இரவு வெளியாகும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.குறித்த  இந்திய வியாபாரிக்கு, கொரோனா...

மனைவியை பார்க்க வெளிநாட்டிலிருந்து பரிசுகளுடன் வந்த கணவனுக்கு

வெளிநாட்டில் கணவர் பணிபுரியும் நிலையில் கேரளாவில் உள்ள மனைவி திடீரென உயிரிழந்தது அவரை பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.கேரளாவின் திருவனந்தபுரத்தை  சேர்ந்தவர் பிரசாந்தன் பிரபாகரன் நாயர் (48). இவர் மனைவி மினி (39). தம்பதிக்கு சோனா என்ற மகள் உள்ளார்.பிரசாந்தன் துபாயில் வாகன ஓட்டுனராக பணிபுரிகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் மினி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இதையடுத்து வியாழன் அன்று...

புதன், 3 ஜூன், 2020

வந்து விட்ட வெட்டுக்கிளிகள். கிளிநொச்சிக்கும் ஒரு வாழை மரம் முற்றாக நாசம்

குருநாகல் மாவத்தகம பகுதியில் அடையாளங் காணப்பட்ட வெட்டுக்கிளி வட மாகாணத்தில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதா விவசாய  பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன் தெரிவித்துள்ளார்.வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அந்த வெட்டுக்கிளி  தற்போது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.குருநாகல், கேகாலை  மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் வெட்டுக்கிளி...

செவ்வாய், 2 ஜூன், 2020

யாழ் யாழ் வடமராட்சிப் பாடசாலையிலிருந்து சடலமொன்று மீட்பு

யாழ். புலோலி அ.மி.த.க.பாடசாலையில் இருந்து.02-06-20. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.குறித்த பாடசாலையில் காவலாளியாக கடமையாற்றி வந்தவரே, இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் என அடையாளம்  காணப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பாடசாலையில் காவலாளி வழமை போன்று  நேற்று இரவு, கடமைக்கு வந்த நிலையிலையே.02-06-20. இன்றைய தினம் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில், சம்பவம்...