யாழ் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்.பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
குளவி கொட்டியதையடுத்து, குறித்த பெண் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்
தெரிவிக்கின்றனர்.
செட்டிக்குறிச்சி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய குணசேகரம் வரதாசிரோமணி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தனது வீட்டிற்கு அருகில் உள்ள காணியில் பனை ஓலைகளை வெட்டிக் கொண்டிருந்த போது குளவி கொட்டியுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக