siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 30 ஜூலை, 2021

இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ள நாணய மாற்று விகிதம்.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 197 ரூபா 60 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 89 சதம்.ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 274 ரூபா 79 சதம். விற்பனை பெறுமதி 282 ரூபா 73 சதம்.யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 64 சதம் விற்பனை பெறுமதி 240 ரூபா 77 சதம்.சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபா 34 சதம் விற்பனை பெறுமதி 223 ரூபா 80 சதம்.கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல்...

வியாழன், 29 ஜூலை, 2021

மரண அறிவித்தல் திருமதி சந்திரராஜா சுகந்தினி 29-07-21

பிறப்பு-21-03-1974.--மறைவு-29-07-2021யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி வுப்பர்டலை வதிவிடமாகவும் கொண்ட 29-07-2021 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் திருமதி சுகந்தினி சந்திரராஜா (சுகந்தி), சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராசா செல்வநாயகம், சாந்தரூபி தம்பதிகளி்ன் ¨அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகசாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,சந்திரராஜா ஆறுமுகசாமி(சுக்கு- ஜேர்மனி) அவர்களின் அன்பு மனைவியும்,திருமதி சுகந்தினி சந்திரராஜா...

சனி, 24 ஜூலை, 2021

ஐஸ் கிரீம்.உலகிலே தங்கத்தின் விலைக்கு நிகராக விற்பனை செய்கின்றனர்.

பொதுவாக ஐஸ்கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட விரும்பும் ஒரு பொருள்ஐஸ்கிரீம் பலவித ருசியுடன், பல ஆண்டுகளாக சாப்பிடப்பட்டு வந்தாலும் அதன்மீது இருக்கும் மோகம் இன்னும் குறையாமல், சொல்லப்போனால் இன்னும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் துபாயில் ஒரு நிறுவனத்தில் ஐஸ்கிரீம் விலை ரூ.60,000-க்கு விற்பனை செய்கின்றனர்.துபாயில் உள்ள ஸ்கூப்பி கபே என்ற நிறுவனம் 840 அமெரிக்க டாலரில், இந்திய மதிப்பில் சுமார்...

மக்களுக்கு எச்சரிக்கை. நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்த மழை வீழ்ச்சி

நாட்டின் தென்மேற்கு பகுதியில் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அதிகரித்த மழை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.மேல்...

வியாழன், 22 ஜூலை, 2021

குளப்பிட்டி சந்தியில் வர்த்தக நிலையத்திற்கு தீ வைத்த கும்பல் சிக்கியது

கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்றிரவு (21) வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வாள் ஒன்றும் வன்முறை சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல் துறையினர் தெரிவித்தனர்.யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப் பகுதியில் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் புடவை கடை ஒன்றுக்கு பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல் மூலம் தீ மூட்டப்பட்டது.இந்த...

யாழ் நகரில் யாசகர் ஒருவர் சடலமாக மீட்பு

யாழ் நகரில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள நடைபாதை வியாபார ஒழுங்கை பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த முதியவர் யாழ் நகரப் பகுதியில் யாசகம் செய்பவர் என தெரிய வந்துள்ளது.முதியவர் இருதய நோய் காரணமாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.யாழ்ப்பாண காவல் துறையால்   முதியவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு பிசிஆர் பரிசோதனையின் பின்னர் மரண விசாரணை இடம் பெறவுள்ளது....

செவ்வாய், 20 ஜூலை, 2021

மரண அறிவித்தல் அமரர் நன்னித்தம்பி தயாசீலன் (தயா ) 20-07-21

பிறப்பு--09-2-1959  -இறப்பு-20 07 2021யாழ் தோப்பு அச்சுவேலியை . பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நன்னித்தம்பி தயாசீலன் அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடா Scarborough Ontario வில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நன்னித்தம்பி,  முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்றவர்களான சாந்தநாயகி, யோகசீலன் மற்றும்...

திங்கள், 19 ஜூலை, 2021

இன்றும் நாட்டில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை

நாட்டில்.19-07-2021. இன்றுசப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று...

ஞாயிறு, 18 ஜூலை, 2021

சண்டிலிப்பாய் பகுதியில் ஒன்பது மாத குழந்தை கோவிட் தொற்றால் உயிரிழப்பு

யாழ்.சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒன்பது மாதப் பெண் குழந்தையொன்று உயிரிழந்த நிலையில் கோவிட்நோய்த் தொற்றுள்ளமை சடலத்தில் மீதான பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதுகுறித்த குழந்தை திடீர் சுகயீனம் காரணமாக நேற்று சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுஎனினும், அங்கிருந்து நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.முதலாவது பி.சி.ஆர். பரிசோதனையில் மூலக்கூறுகள் போதாது எனத் திருப்பப்பட்டது....

வெள்ளி, 16 ஜூலை, 2021

மரண அறிவித்தல் Dr.சிற்றம்பலம் ராஜலிங்கம் 16 07 -21

 பிறப்பு   09-02-1942 --இறப்பு-16 07 -2021 யாழ். அச்சுவேலி தோப்பை பிறப்பிடமாகவும்,.தோப்பு அச்சுவேலி, கோப்பாய், வெள்ளவத்தை மற்றும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட  Dr.சிற்றம்பலம் ராஜலிங்கம் (இளைப்பாறிய தலைமை வைத்திய அதிகாரி அச்சுவேலி.மற்றும் தனியார் மருத்துவஅதிகரி ) 16.07.2021.வெள்ளிக்கிழமை 1 அன்று அச்சுவேலியில்  இயற்கையெய்தினார்அன்னார் காலம்சென்றவர்களான  சிற்றம்பலம் சிதம்பரம் தம்பதிகளின் அன்புமகனும் திருமதி ...

ஞாயிறு, 11 ஜூலை, 2021

இலங்கையில் சீரற்ற காலநிலையால் பல பகுதிகளில் மின் தடை

 நாட்டில் பெய்துவரும் பலத்த மழை மற்றும் கடும் காற்றுக் காரணமாக சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளர்களது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளதுகுறித்த பகுதியில் தடைப்பட்ட மின் விநியோகத்தை மீட்டெடுக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை, நேற்றையதினம் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக 85,000 க்கும் மேற்பட்ட மின்சார நுகர்வோருக்கு மின்சாரம் தடைபட்டதாகவும் அமைச்சு...

சனி, 10 ஜூலை, 2021

நாட்டில் பல பகுதிகளில் கடும் சுழல் காற்று.வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் சுழல் காற்றும் வீசும் அபாயம் உள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.இது குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டுடிக்கப்பட்டுள்ளது.இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

புதன், 7 ஜூலை, 2021

சேருநுவர பொலிஸ் பிரில் தாதியர் ஒருவர் தீ மூட்டி தற்கொலை முயற்சி

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் 06-07-2021.அன்று மாலை இடம்பெற்றுள்ளது.குறித்த நபர் ஈச்சிலம்பற்று கொரோனா இடைத்தங்கல் முகாமில் கடமையாற்றி வந்த சேருநுவர பகுதியைச் சேர்ந்த தாதியர் என தெரிவிக்கப்படுகின்றது.கணவர் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்ற நிலையில், தீ மூட்டிக் கொண்ட தாதிய உத்தியோகத்தர் தற்பொழுது...

செவ்வாய், 6 ஜூலை, 2021

நாட்டில் வீட்டிலிருந்து கற்கும் மாணவர்களுக்க்கு தொலைக்காட்சி அலைவரிசை

தரம் 1 முதல் 13 வரையான மாணவர்களுக்காக அரசாங்கம் 20 தொலைக்காட்சி அலைவரிசைகளை நிறுவத் திட்டமிட்டுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளரும் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக் கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.பாடசாலை மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் இலவசக் கல்வியை வழங்கவும் அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது என அவர் கூறினார்.இதன்படி உயர்தரத்தில்...

திங்கள், 5 ஜூலை, 2021

கோண்டாவிலில் கடன் பணத்தைக் கேட்டு வீடு தேடிச் சென்றவர் மீது தாக்குதல்

 யாழ்  கோண்டாவில் காளி கோவிலடியில் கடன் பணத்தைக் கேட்டு வீடு தேடிச் சென்றவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தந்தையும் மகனும் இணைந்து அவரின் தலை மற்றும் கழுத்தில் வாளினால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றது.சம்பவத்தில் மோகனராஜா ரஜீவன் (வயது-37) என்பவரே சம்பவத்தில் படுகாயமடைந்தார்.சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நிலாவரை.கொம்...

ஞாயிறு, 4 ஜூலை, 2021

துவிச்சக்கரவண்டியில் சென்றவரைஅம்பாறையில் லொறி மோதி பலி

அம்பாறை – அட்டாளைச்சேனை பகுதியில் வீதியால் துவிச்சக்கரவண்டியில் சென்ற ஒருவர் லொறி மோதி உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் 03-.'7-2021-சனிக்கிழமைஅன்று மதியம் அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்துச் சம்பவமானது வீதி திருத்த வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த மண்லொறி பிரதான வீதியினால் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னால் துவிச்சக்கரவண்டியில் சென்ற நபரை மோதி தப்பிச் சென்றுள்ளது.குறித்த விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர...

வெள்ளி, 2 ஜூலை, 2021

வேலை செய்தாலே இடுப்பு வலி உடல் சோர்வு இருந்தால் இதை சாப்பிடுங்கள்

நீங்கள் அடிக்கடி பலவீனம் என்ற பிரச்சினை மூலம் தொந்தரவு என்றால். இன்று நாம் ஒரு விஷயத்தை பற்றி உங்களுக்கு சொல்லப்போகிறோம். இது அவர்களின் உடலில் பலவீனத்தின் சிக்கலைக் குறைகிறதுஇது கருப்பு கடலை. கடலையில் உள்ள புரதம், வைட்டமின்கள், இரும்பு, கால்சியம், நார்ச்சத்து கூடுதலாக மற்ற ஊட்டச்சத்து நிறைய உள்ளன.து உங்கள் உடலுக்கு மிகவும் பயனுள்ளது. அதை வழக்கமான நுகர்வு மூலம், உடல் போதுமான ஆற்றல் பெறுகிறது. உடலின் பலவீனம் எப்போதும் நீக்கப்படுகிறதுதண்ணீரில்...

வியாழன், 1 ஜூலை, 2021

நாட்டில் பாணின் விலை எதிர்பாராதளவு சடுதியாக அதிகரிப்பு. அடுத்த வார முதல்

பாணின் விலை எதிர்பாராதளவு சடுதியாக அதிகரிப்பு..!அடுத்த வார முதல்..!கோதுமை மாவின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அடுத்த வாரத்திலிருந்து பாணின் விலை 10 ரூபாவினால்அதிகரிக்கப்படவுள்ளது.இந்த அறிவிப்பினை அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இன்று புதன்கிழமை வெளியிட்டார்.செரன்டிப் நிறுவனம் கடந்த வாரத்தில் கோதுமை மாகிலோ ஒன்றின் விலையை 18 ரூபாவினால் உயர்த்தியுள்ளது.இதுதவிர எரிபொருள் விலையேற்றமும்...