கிளிநொச்சியில் தொடரும் பலத்த மழை காரணமாக தாழ் நிலங்கள் வெள்ளத்தால் நிறைந்துள்ளன.கிளிநொச்சி இந்துக் கல்லூரி வளாகம் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.இதேவேளை உருத்திரபுரம் வீதியில் வெள்ளம் அதிகளவு பாய்கின்றது. இதனால் போக்குவரத்தும்
தடைப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கிளிநொச்சியில் பலத்த மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புகிளிநொச்சியில் பலத்த மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.24.11.19. நள்ளிரவு ஆரம்பித்த மழை 25.11.19 (திங்கட்கிழமை) தொடர்ச்சியாக பெய்வதால் மக்கள் தமது அன்றாட
செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பலத்த மழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. அத்தோடு கிளிநொச்சியில் உள்ள குளங்களின் நீர் மட்டமும் அதிகரித்து வருகின்றது.இதன் காரணமாக
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆற்றினை கடப்பதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.பாடசாலையின் இறுதி ஆண்டு பரீட்சைகள் இடம்பெற்று
வரும் நிலையில் பாடசாலை மாணவர்களும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக