siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 9 ஏப்ரல், 2022

அமரர் சின்னத்தம்பி சிவானந்தம்1ம் ஆண்டு நினைவஞ்சலி (செல்வா) 09.04.22

பிறப்பு-02 05 1964--இறப்பு--22 03 2021
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசில்வசித்து வந்தவரும் தற்போது  நவற்கிரியில் வதித்து வந்த
 திரு சின்னத்தம்பி சிவானந்தம் (செல்வா,சிவா.) அவர்களின் .முதலாமாண்டு திதி  09.04.2022-சனிக்கிழமை அன்று 
அன்று அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி மற்றும் அசுவதி  தம்பதிகளின் 
அன்பு மகனும் ( மூத்த புதல்வர் ) காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவறஞ்சனி (றஞ்சி .சுவிஸ்  )அவர்களின் பாசமிகு கணவரும் வசிதா நிறஞ்சன் ஆகியோரின் 
பாசமிகு தந்தையும் ஆவர் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் 
அன்பினில் விளைந்த
ஆரமுதே அளவிலா
இன்பப் பெரும் சுடரேஆனந்தமாய் உள்ளங்கள்
கவர்ந்த உத்தமரே அற்புத
மனிதரின் மாணிக்கமேதொலை தூரம் சென்ற போதும்
தொலையாதது உமது நினைவுகள்
தொடு வானம் போல் தொடரும்
கனவுகள் தோழமையாய்
திகழும் நற்சந்தங்கள்நம்மை விட்டகன்று நாட்கள்
பலவாயிற்று நானிலமும் ஏங்குதே
நல்ல குணவாளனுக்காய் நாட்கள்
மாதங்களாய் அகவையும் ஒன்றாயிற்று
 நல்லவரே வானவரே நற்பதவி கண்டீரேசீரும் சிறப்புமாய் நீர் இருந்த
நாட்கள் சிந்தாமல் சிதையாமல்
கதை கவிதை சொல்லுதே சித்திரமே
உம்தோற்றம் சிந்தையிலே சிகரம் ஐயா
 சீரோடு சிறப்பாக நீர் சிவனிடத்தில் இளைப்பாறும்ஆண்டு கடந்தாலும் ஆறாத துயரத்தில்
மீளாது தவிக்கும் அன்பான குடும்பத்தினர்,
உற்றார், உறவினர், நண்பர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
வீ ட்டு  முகவரி 
நவற்கிரி .புத்தூர் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு 
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக