siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

போதைப்பொருள் கடத்திய தமிழ் இளைஞனுக்கு சிங்கப்பூரில் தூக்குத்தண்டனை

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் இளைஞரான தர்மலிங்கம் நாகேந்திரன், 27-04-2022.நாளை புதன்கிழமை 27ம் திகதி தூக்கிலிடப்படவுள்ளதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நாகேந்திரன் தொடர்பில் அவரது தாயார் புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாகவும், அதன் மீதான விசாரணை .26-04-2022.இன்று நடைபெறுவதாகவும் நாகேந்திரனின் சகோதரி ஊடகம் ஒன்றுக்குத்  தெரிவித்துள்ளார்.
42.7கிராம் ஹெராயின் போதைப் பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில் 2009ஆம் ஆண்டு நாகேந்திரன் கைதுசெய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 21.
 அதைத்தொடர்ந்து பத்து ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் அவருக்கு 2019ஆம் ஆண்டு மரண தண்டனை 
விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக