கேகாலை – மாவனல்லை பகுதியில் உள்ள மியான் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
குறித்த மாணவர் மாவனல்லை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள மியான் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற வேளையில் நீர்வீழ்ச்சியின் கரையில் இருந்து தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது படுகாயமடைந்த மாணவன் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக