நாட்டில் கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிப்பதற்காக 24 மணிநேர கண்காணிப்பு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 125
விதிமீறல்களை சிசிடிவி மூலம் அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை சிசிடிவி கண்காணிப்பு கமரா அமைப்பு மூலம் கண்டுபிடிக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை இலங்கை பொலிஸார் நேற்று ஆரம்பித்தனர்.
அதற்கமைய போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் நேற்று கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட பரீட்சாத்த திட்டம் ஜனவரி 31 வரை தொடரும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும் போக்குவரத்து விதிமீறல் பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு அறிவிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
என்பத குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக