கிணற்றிலிருந்து 8 மாத குழந்தையொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜ்புரம் பகுதியில் மதியம் இடம்பெற்றுள்ளது.
குழந்தையின் தாயார் தனது மாமியின் அரவணைப்பில் குழந்தையினை விட்டுவிட்டு அவரது மூத்த பிள்ளையுடன் காட்டிற்கு விறகு
எடுப்பதற்காக சென்றுள்ளனர்.
இந் நிலையில் வீடு திரும்பிய தாயார் குழந்தையினை காணவில்லை என வீடு முழுவதும் தேடியுள்ளார். பின்னர் குழந்தை கிணற்றில் சடலமாக மிதப்பதைக் கண்டுள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் பாட்டியின் அரவணைப்பில் குழந்தை இருந்த சமயத்தில் பாட்டி குழந்தையினை ஊஞ்சலில் போட்டு ஊஞ்சலுடன் கிணற்றில் தூக்கி எறிந்துள்ளதாக
தெரியவந்துள்ளது.
75வதுடைய குறித்த பாட்டியை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என அயலவர்கள் தெரிவித்தனர்.
புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக