siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 26 ஜனவரி, 2024

சில பகுதிகளில் டொரன்டோவில் கடும் மழை குறித்து எச்சரிக்கை

டொரன்டோ பெரும்பாக பகுதியில் கடுமையான மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை 
விடுத்துள்ளது.
குறித்த பகுதியில் 15 முதல் 25 மில்லி மீட்டர் வரையில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் இந்த மழை காரணமாக வெள்ள நிலைமைகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாள் முழுவதும் மேகமூட்டத்துடனான வானிலையே நிலவும் எனவும் வெப்பநிலை 7 பாகை செல்சியஸ் ஆக காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மேகமூட்டத்துடனான வானிலையானது  இந்த வார இறுதி வரையில் தொடரும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது
.என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக