siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 10 ஜனவரி, 2024

நாட்டில் மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள்

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் 
மூழ்கியுள்ளன.  
இதன் அடிப்படையில் ஓட்டமாவடி பதுரியா நகர், மாஞ்சோலை ஆகிய கிராமங்களின் எல்லைப்பகுதிகள் பெருமளவிலும் மாஞ்சோலை அல்-ஹிரா வித்தியாலம், லெப்பை தம்பி சிறுவர் பூங்கா,குளக்கரை
 பள்ளிவாயல் வளாகம் வெள்ளத்தில்மூழ்கியுள்ளதுடன் மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர்
இதனால் மக்கள் பெரும் அசோகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ் வெள்ளநீரினை அகற்றும் பணிகள் அக் கிராமங்களில் இன்று (10.01) அதிகாலை முதல் மாஞ்சோலை ஹிழுரிய்யா ஜும்ஆப்பள்ளி வாயலின் ஒத்துழைப்புடன் அக்கிராம சிவில் சமூக அமைப்புக்களினால் கிராம சேவையாளர்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  
வெள்ள அனர்த்ததினால் பாதிப்புற்றுள்ள நிலையில் பொது இடங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கான சமைத்த உணவுகள் நலன் விரும்பிகளால் வழங்கும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறமை என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக