siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 9 ஜனவரி, 2024

மீண்டும் ஜப்பானில் உள்ள ஹோன்சு நகரின் மேற்கு கடற்கரை பகுதியில் பாரிய நிலநடுக்கம்

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் மேற்கு கடற்கரை பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. 
அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. குறித்த நிலநடுக்கத்தால் இதுவரை 161 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறான நிலையில், ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஜப்பானில் உள்ள ஹோன்சு நகரின் மேற்கு கடற்கரை பகுதியில் 46 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்று இதுவரை தகவல் கிடைக்கவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. என தகவல் வெளியாகியுள்ளது.என்பதாகும் 





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக