இலங்கை மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற நால்வரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிந்தகல பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் 03-02-2024.அன்று நீராடச் சென்ற போது இந்த விபத்து
இடம்பெற்றுள்ளது.
பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன நபரை தேடும் பணியில் பொலிஸாரும் கடற்படையின் உயிர்காப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். என்பதாகும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக