அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆஸ்டின் நகரில் மருத்துவமனை ஒன்றின் அவசரகால அறைக்குள் கார் ஒன்று
திடீரென புகுந்தது.
அந்த அவசரகால அறையின் காத்திருப்பு அறையில் இருந்தவர்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் முதியவர்கள் 3 பேர் மற்றும் 2 இளைஞர்கள் என 5 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். காரை ஓட்டி வந்த பெண் மிச்செல்லே ஹாலேவே (வயது 57) என அடையாளம்
காணப்பட்டார்.
அவர் காரிலேயே காயத்துடன் கிடந்துள்ளார். அவருக்கு உடனடியாக சி.பி.ஆர். சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அதில் பலனின்றி அவர்
உயிரிழந்து விட்டார்.
அந்த மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து காரை நிறுத்த முற்பட்டனர்.
இதனால், பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டது. இது உள்நோக்கம் கொண்டது இல்லை என வடக்கு ஆஸ்டின் போலீசார் தெரிவித்தனர். ஆஸ்டினில் நடப்பு ஆண்டில் நடந்த 7-வது கொடிய விபத்து சம்பவம் இதுவாகும். இதில் 7 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக