siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 26 ஜூலை, 2022

அந்தியேட்டி கிரியை திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா) 31ம் நாள் .26.07.22

மலர்வு-02-05.1942-உதிர்வு-26-06-2022.-யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகக்கொண்டிருந்த  திருமதி ஆ .க.சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்களின் அந்தியேட்டி கிரியை 26-06-2022.செவ்வாய்க்கிழமை அன்று  அன்னார் காலம்சென்ற  திரு.ஆ .க . சுப்பிரமணியம்(மணிஐயா)
 அவர்களின் பாசமிகு மாணவியரும் காலம் சென்றவர்களான  தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும் 
காலம்சென்றவர்களான ஆறுமுகம் கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும் 
சென்றவர்களான  துரைராஜா செல்வராஜா ஞானமணி வித்திலமணி ஜெயரத்தினம் மற்றும் 
பாலசிங்கம் சிவலிங்கமணி ஆகியோரின் அன்புச்சகோதரியும் தர்மசிறி (இலங்கை )தர்மபூபதி (சுவிஸ் )தர்மதேவி((ஜேர்மன் ) தர்மதேவன்(கனடா )
 தர்மசாந்தினி (நோர்வே )காலம்சென்ற தர்மகுமார் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.இங்கனம் -குடும்பத்தினர் 
எமக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
அம்மா -அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்தவரே
அன்பின் விருட்சமாகி எமக்கெல்லாம் நிழலாக
நின்று கருணை மழை பொழிந்து கண்ணயராது
எமையெல்லாம் காத்து, வளர்த்து வாழ்வழித்து
கலங்கரை விளக்காய் வாழ்க்கை என்னும் 
ஓடத்திற்கு ஒளி காட்டி வழிகாட்டி
சீரும் சிறப்புமாக வாழ வைத்த எம் அன்னையே! 
குணம் என்னும் குன்றேறி நின்று எம்மை 
மகிழ்ச்சி யென்னும் மாகடலில்
திழைக்க வைத்த எங்கள் மாமியே!
கட்டியணைத்து முத்தமிட்டு பேரன்புடன்
எமையெல்லாம் வளர்த்தெடுத்த எங்கள் பாட்டியே!
கடல் கடந்து எமைக்காண ஓடோடி வந்த எம் அம்மாவே  பூட்டிஅம்மாவே 
தரணியில் நீங்கள் தந்த அன்பு பாசம் எல்லாம் சரித்திரத்தில்
மாறாத நினைவுகளோடு நாமும் வாழ்வோம்,
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டும் 
உங்கள்  பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் , 
பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், பட் ட ப்பிள்ளைகள் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்
தகவல்-
குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக