நாட்டில் அம்பாறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று கால்வாயில் வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது பேருந்தில் ஏறக்குறைய 30 சிறுவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் ஐந்து மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில், அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை உதெனிய ரணவிரு மாவத்தைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக