யாழ் தெல்லிப்பழையில் உயிரிழந்த பெண்ணைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழையிலுள்ள வீடொன்றிலிருந்து 4ஆம் திகதி பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.
அது கொலையா? தற்கொலையா? என ஆராயப்பட்ட நிலையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் 16 வயதுடைய மகன் மீது சந்தேகம் வெளியிட்டிருந்தார்.
கைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையான மேற்படி மகன், தாயாரின் சடலம் மீட்கப்பட்ட பின்னர் தலைமறைவான நிலையில்,
நேற்றுக் காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் விசாரணைகள் இடம்பெறுவதோடு போதைப்பொருள் பாவனை தொடர்பான பரிசோதனைக்கும் அவர் உட்படுத்தப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் அண்மையில் பதிவான சம்பவம் ஒன்றையடுத்து சிறுவர்களுக்கு திறன்பேசிகளைவழங்குவது தொடர்பாக பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார்
அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, அவர்களுக்கு திறன்பேசிகளை வழங்குவதால் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கதது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக