மோசமான பனி மூட்டம் காரணமாக பாகிஸ்தானில் ஓட்டுநருக்கு சாலை தெரியாமல் போனதால், பாலத்தில் இருந்து லாரி கவிழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடும் பனி மூட்டம் காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டிருந்தது. இதனால் ஓட்டுநர் கிராமம் வழியாக உள்ளூர் சாலை வழியாக லாரியை ஓட்டிச் சென்றார். லாரியில் 23 பேர் இருந்தனர்.
இவர்கள் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார்.
திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து லாரி பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இதில் லாரியில் இருந்து 14 பேர் பரிதாபமாக
உயிரிழந்தனர்.
இதில் 8 பேர் குழந்தைகள் ஆவார்கள். காயம் அடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் பெண்கள் ஆவார்கள்.என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக