siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 8 மே, 2026

இரண்டு பிரிட்டிஷ் நாட்டினர் ஹன்டா வைரஸ் தொற்றால் பாதிப்பு

தெற்கு அட்லாண்டிக் தீவான டிரிஸ்டன் டா குன்ஹாவில், இரண்டு பிரிட்டிஷ் நாட்டினருக்கு ஹன்டா வைரஸ் தொற்று இருப்பது உறுதி
 செய்யப்பட்டுள்ளது.
மேலும் மூன்றாவது நபருக்கு தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு முகமை
 தெரிவித்துள்ளது.
எம்.வி. ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பலில் உள்ள பிரிட்டிஷ் குடிமக்கள் எவருக்கும் தற்போது அறிகுறிகள் 
எதுவும் இல்லை.
ஸ்பெயினின் டெனெரிஃப் துறைமுகத்தில் கப்பல் நங்கூரமிடும்போது, ​​கப்பலிலிருந்து இறங்கும் பிரிட்டிஷ் நாட்டினருக்கு ஆதரவளிக்க பிரிட்டிஷ் அரசாங்க ஊழியர்கள் அங்கு இருப்பார்கள் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 24 அன்று, தெற்கு அட்லாண்டிக் தீவான செயின்ட் ஹெலினாவில் ஏழு பிரிட்டிஷ் நாட்டினர் கப்பலிலிருந்து இறங்கியதை அந்த முகமை அறிந்திருக்கிறது.
அவர்களில் இருவர் பிரிட்டனுக்குத் திரும்பி, வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் தொற்றுக்கான அறிகுறிகளைத் தெரிவிக்கவில்லை.
அவர்களில் நால்வர் செயின்ட் ஹெலினாவில் தங்கியுள்ளனர், ஏழாவது நபர் பிரிட்டனுக்கு வெளியே கண்டறியப்பட்டுள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 7 மே, 2026

ஏற்பட்ட தீ விபத்தில் கனடாவின் கேடினோவில் இருவர் மரணம்

கனடா கியூபெக் நகரின் கேடினோ நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர். 
ஒரு குடியிருப்பில் சிறிய தீ விபத்து ஏற்பட்டிருப்பதையும், மயக்க நிலையில் இருந்த இருவரைக் கண்டதாகவும் காவல்துறை
 விவரித்தது.
சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
34 வயதான ஆண் ஒருவர் தனது 30 வயதான துணைவியைக் கொலை செய்துவிட்டு, பின்னர் அவர்களது குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த மரணங்கள் "கொலை-தற்கொலையுடன் ஒத்துப்போகின்றன" என்று காவல்துறை பிரெஞ்சு மொழி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் மட்டக்களப்பில் உரிமை கோரப்படாத சடலங்களால் பரபரப்பு

நாட்டில் .மட்டக்களப்பு வாவியில் நீரில் மூழ்கிய நிலையில், அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் .07-05-இன்று வியாழக்கிழமை (07) மாலை மீட்கப்பட்டுள்ளன. உரிமை கோரப்படாத சடலங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றியுள்ளது.
மட்டக்களப்பு சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில், இரண்டு சடலங்கள் மிதந்து கரை ஒதுங்கியிருப்பதை இன்று மாலை அப்பகுதி மக்கள் அவதானித்து தகவல் வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் பிரிவு அதிகாரிகளினால் சடலங்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள்? என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
தற்போது, நீதிமன்ற அனுமதியைப் பெற்று சடலங்களைப் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர்; முன்னெடுத்து வருகின்றனர். 
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் காவல்துறையினர்; மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 6 மே, 2026

யாழ் புங்குடுதீவில் சொகுசு பேருந்து மோதி இளைஞன் பலி

யாழ் புங்குடுதீவு, வாணர் பாலத்திற்கு அருகே இன்று இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 
இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு வாணர் பாலம் பகுதி, மடத்துவெளி கடற்படை முகாமிற்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
புங்குடுதீவில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர் மீது, எதிர் திசையில் வந்த 'ஜெட்விங்' ஹோட்டல் நிறுவனத்திற்குச் சொந்தமான சொகுசுப் பேருந்து பலமாக
 மோதியுள்ளது.
குறித்த பேருந்து மிக அதிவேகமாகப் பயணித்ததே இந்த உயிரிழப்பிற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் துரதிர்ஷ்டவசமாகச் சம்பவ இடத்திலேயே 
உயிரிழந்தார்.
தற்போது பொலிஸார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பேருந்து ஓட்டுநரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 5 மே, 2026

நள்ளிரவில் யாழில் அதிவேகத்தால் மதிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், அதிவேகம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் மதிலுடன் மோதியுள்ளது.
விபத்தில் சிக்கிய 22 மற்றும் 24 வயதுடைய கரவெட்டி வடக்கைச் சேர்ந்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. 
கோப்பாய் பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கோப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் கரவெட்டியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நண்பர்களின் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 4 மே, 2026

டெங்கு தாக்கத்தினால் இலங்கையில் பன்னிரண்டு மரணங்கள் பதிவு

இலங்கையில் .இந்த ஆண்டு இதுவரை 12 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் உட்பட, டெங்கு தாக்கத்தினால்  12 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு 
அறிவித்துள்ளது. 
 சமூக மருத்துவர் டாக்டர் பிரஷில சமரவீர இன்று இந்த தகவலை அறிவித்துள்ளார். 
தொடர்ந்து தெரிவித்த அவர்,  கொழும்பு மற்றும் இரத்தினபுர மாவட்டங்களில் இருந்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாகத் 
தெரிவித்தார்.
 2026 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 25,846 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் 
குறிப்பிட்டார்.
 இடைவிட்டு பெய்யும் மழையும், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு உகந்த சுற்றுச்சூழல் நிலைமைகளும் டெங்கு
 பரவல் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளன 
என்றும், அவர் மேலும் கூறினார். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது..

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 3 மே, 2026

நாட்டில் .காலி சிறைச்சாலையில் தப்பியோடி முயன்ற கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு

நாட்டில் காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று.03-05-026. இன்று பதிவாகியுள்ளது. 
 போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது பொலிஸ் அதிகாரிகளால் மேற்படி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதில் கைதி ஒருவரின் தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 2 மே, 2026

நாட்டில் உயிரிழந்தவரின் கால் மற்றும் கையில் மூன்று வெட்டுக் காயங்கள்

நாட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ச கால் மற்றும் கையில் மூன்று வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் இது தவறான 
முடிவெடுத்தமையா அல்லது கொலையா என்பது குறித்து காவல்துறை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் 
தெரிவித்திருந்தனர்.
அவர் ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் சம்பவித்த மரணத்திற்கான காரணம் தவறான முடிவெடுத்தமையே என மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட சட்ட மருத்துவ நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ச கடந்த 30ஆம் திகதி தனது வீட்டுத்தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில்
 மீட்கப்பட்டார்.
அவரது  சந்தேகத்திற்கிடமான இந்த மரணம் குறித்த மரணப் பரிசோதனைக்காக நான்கு சட்ட மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று 
நியமிக்கப்பட்டது.
அதன்படி, தவறான முடிவெடுத்து அவர் ஏற்படுத்திக்கொண்ட காயங்களால் குறித்த மரணம் ஏற்பட்டது  என்று விசாரணைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது.
.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 1 மே, 2026

நாட்டில் களுத்துறை உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தில் தீ விபத்து

நாட்டில் களுத்துறை உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் இரண்டாம் தளத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 
கணினித் தரவு அமைப்புப் பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
தீ விபத்துக்கான காரணம் அல்லது அதனால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
 களுத்துறை நகர சபை தீயணைப்புத் துறை தற்போது 
தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. . என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.htm




 

வியாழன், 30 ஏப்ரல், 2026

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் சின்னத்தம்பி அசுவதி 30.04.26

யாழ் மீசாலையைப்  பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகக்கொண்ட  
  (கடந்த .11-05-2025-அன்று சிவபதமடைந்த) அமரர்  சின்னத்தம்பி அசுவதி
  அவர்களின்முதலாம் ஆண்டு நினைவஞ்சலி..திதி -30-04-2026. வியாழக்கிழமை அன்று 
 . அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அப்பு மனைவியும் திருமதி. தங்கேஸ்(இலங்கை )
.மற்றும்காலஞ்சென்ற சிவானந்தம் (,சிவா.) மற்றும் திரு .அருளானந்தம் (சுவிஸ் )செல்வா  (சுவிஸ் ) ஆகியோரின் அன்புத்தாயாருமாவார்  
-------------
நீங்காத நினைவுகள்>>>
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் 
உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
தகவல் .
குடும்பத்தினர் 

https://navakkiri.blogspot.com/2022/04/1-090422.html



புதன், 29 ஏப்ரல், 2026

நாட்டில் ஹட்டன் - டிக்கோயா வீதியில் தனியார் பேருந்து விபத்து: பலர் காயம்

நாட்டில் டயகமவில் இருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், 20 பேர் 
காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து ஹட்டன் - போடைஸ் பிரதான வீதியில் டிக்கோயா பட்டல்கல தோட்டப் பகுதியில் இன்று (29) பிற்பகல் 3:00 மணியளவில்
 இடம்பெற்றுள்ளது.
பயணித்துக் கொண்டிருந்த பேருந்து, எதிரே வந்த மற்றொரு பேருந்துக்கு இடமளிக்க முற்பட்ட போதே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானது.
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 35 பயணிகள் இருந்துள்ளனர். இதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டிக்கோயா மருத்துவமனையின் மருத்தவர் ஒருவர் 
தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரும் அடங்குவர் என காவல்துறையினர்
 குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.   என்பதும்  குறிப்பிடத்தக்கது                                                                                                                                              

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 28 ஏப்ரல், 2026

பானி பூரி இந்தியாவில் சாப்பிட்ட ஆறு வயது சிறுவன் மரணம்

.இந்தியாவில்  ஜார்க்கண்ட் மாநிலம், கிரிடிஹ் பகுதியில் வீதியோர கடை ஒன்றில் பானி பூரி சாப்பிட்ட 6 வயது சிறுவன்
 உயிரிழந்துள்ளார்.
மேலும் பானி பூரி சாப்பிட்ட குழந்தைகள் உட்பட 18 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனைவருக்கும் கடுமையான காய்ச்சல், வயிற்று 
வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள்
 தெரிவித்துள்ளன.
முஃபசில் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பஜ்டோ கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி
 வருகின்றனர்.
சிறுவன் உயிரிழப்பிற்கு உணவு விஷம் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பானி பூரி விற்பனையாளர் தலைமறைவானதையடுத்து அவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 27 ஏப்ரல், 2026

நாட்டில் கிளிநொச்சியில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

.நாட்டில் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் 26-04-2026.அன்று பிற்பகல் மூவர் நீராடிய நிலையில் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில்
 அவரை தேடும் பணி நேற்று மாலை முதல் இடம்பெற்ற நிலையில் இன்று காலை 8.00 மணியளவில் இரணைமடு நன்னீர் மீனவர்களினால்
 மீட்கப்பட்டது.
குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தைச்சேர்ந்த 32வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இங்கிலாந்தில் இரு குழந்தைகள் மரணம் - ஒருவர் கைது

பிரித்தானியாவின் வோல்வர்ஹாம்டனில் உள்ள குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 02 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பத்தில் குழந்தைகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக
 அறிவிக்கப்பட்டது.
இரண்டு குழந்தைகளின் இறப்பிற்குக் காரணமாக இருந்ததாக அல்லது அதற்கு அனுமதித்ததாகச் சந்தேகத்தின் பேரில், 30 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தீ விபத்துக்கான சரியான சூழ்நிலைகளைக் கண்டறிய, மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறையும் தீயணைப்புத் துறையும் இணைந்து ஒரு கூட்டு விசாரணையை நடத்தி வருகின்றன.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 25 ஏப்ரல், 2026

நாட்டில் கிளிநொச்சியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள மாணவியின் உயிரிழப்பு

நாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் தரம்-11 இல் கல்வி கற்றுவரும் மாணவியான அக்சயா தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் 
ஏற்படுத்தியுள்ளது. 
இந்தச் சம்பவம்.24.04.2026  வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. சிரித்த முகத்துடன் எப்போதும் நண்பர்களுடன் கலகலப்பாகப் பழகும் குணம் கொண்ட அக்சயா கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தயாராகி வந்த நிலையில் திடீரென தவறான முடிவெடுத்து உயிரிழந்தமை குடும்பத்தினர், நண்பர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில்
 ஆழ்த்தியுள்ளது.
தயவு செய்து நீங்கள் எடுக்கும் முடிவு உங்களை சுற்றி உள்ள உறவுகளை எந்தளவு பாதிக்கும் என்று கொஞ்சமாவது யோசிச்சி பாருங்கள் உங்களுக்காக அவர்கள் எவ்வளவு எல்லாம்,கஷ்டபட்டு 
இருப்பார்கள். 
என்ன பிரச்சனையாக இருந்தாலும் குடும்பத்திடம் மனசு விட்டு பேசுங்கள் அவர்கள் உங்கள் உறவுகள் தானே அவர்கள் பார்த்து கொள்வார்கள் பெற்றோர்களே நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு 
நம்பிக்கையை கொடுங்கள். 
அப்போது தான் அவர்களும் உங்களிடம் வெளிப்படையாக இருப்பார்கள் . எந்தவொரு பிரச்சினைகளுக்கும் தற்கொலை தீர்வாகாது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 24 ஏப்ரல், 2026

இரண்டு பேருந்துகள் பென்டகன் அருகே மோதி விபத்து - 23 பேர் காயம்

இரண்டு பேருந்துகள்  .பென்டகன் பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பாதுகாப்புத் துறைப் பணியாளர்கள் உட்பட 23 பேர் 
காயமடைந்துள்ளனர்.
ஓம்னி ரைடு மற்றும் ஃபேர்ஃபாக்ஸ் கனெக்டர் போக்குவரத்துப் பேருந்துகள் சற்று முன்னதாக மோதிக்கொண்டன.
காயமடைந்தவர்களில் 18 பேரை மேலதிக மருத்துவப் பரிசோதனைக்காக அவசரப் பணியாளர்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்குக் 
கொண்டு சென்றனர்.
ஐவருக்குச் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. காயமடைந்த 23 பயணிகளில் பத்து பேர் பாதுகாப்புத் துறையைச் 
சேர்ந்தவர்கள்.
இந்த விபத்து காரணமாகப் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் பல மணிநேரம் என்பதும்  குறிப்பிடத்தக்கது.
.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வியாழன், 23 ஏப்ரல், 2026

நாட்டில் யாழ் நோக்கிச் சென்ற ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

நாட்டில் பெண் உயிரிழப்பு, முச்சக்கரவண்டிச் சாரதிக்குப் படுகாயம்! வவுனியா தாண்டிக்குளம் திருநாவற்குளம் மூன்றாம் ஒழுங்கைக்கு எதிர்ப் பக்கமாக அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்
 கடவையில் இன்று 

வியாழக்கிழமை (23-04-2026) முற்பகல்- 10.15 மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் முச்சக்கர வண்டியொன்று மோதுண்டதில் அதில் பயணித்த பெண்ணொருவர்
 உயிரிழந்துள்ளார். 
முச்சக்கர வண்டியின் சாரதி உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் வவுனியா மாவட்டப் பொதுவைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

                                                                                                                                                                                                                                                                                                                                

புதன், 22 ஏப்ரல், 2026

யாழ் .உரும்பிராயில் கோர விபத்து- தந்தையும் மகனும் பலி

யாழ் உரும்பிராய் பகுதியில்.22-04-2026. இன்று  அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளுடன் கனரக வாகனம் மோதி, இந்த விபத்து இடம் பெற்றுள்ளது
. விபத்தில், மோட்டார் 
சைக்கிளில் பயணித்த 65 வயதான தந்தையும் 29 வயதான மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



செவ்வாய், 21 ஏப்ரல், 2026

மரண அறிவித்தல் அமரர் இராசரத்தினம் வசந்தகுமார் (அப்பன் )

துயர் பகிர்வு-தோற்றம் 28-05-1969--மறைவு-20-04-2024.
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் லண்டனை  
வசிப்பிடமாகக் கொண்ட 
 அமரர் இராசரத்தினம்  வசந்தகுமார் (அப்பன் ) அவர்கள் 
  லண்டனில் 20-04-2026.,திங்கள்க்கிழமை அன்று
 காலமானார்  அன்னார்  காலம்சென்ற  இராசரத்தினம்,இலட்சுமி (பரிமளம்)  தம்பதியினரின் அன்பு மகனும்
 திருமதி சசி. (லண்டன்  )அவர்களின் அன்புக்கணவரும் 
ஆகாஷ்.(லண்டன்  ) அபினயா(லண்டன்  )ஆகியோரின் பாசமிகு தந்தையும்
 மலர்வதான ( வதான ) சுகந்தி   ஆகியோரின்  அன்பு ஆகியோரின் அன்புச்சகோதனும் 
 சரிதா  கீர்த்தன் கீர்த்தி லவன்சி  கிருசான் ஆகியோரின்அன்புமாமனும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியை
06-05-2026-புதன்கிழமை அன்று லண்டலில் நடைபெறும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
இலங்கை  வீட்டு முகவரி: 
(எல்லாளன் வீதி ) 
நவற்கிரி .புத்தூர்
https://navakkiri.blogspot.com/2022/04/3-220422.html

திங்கள், 20 ஏப்ரல், 2026

நாட்டில் சிறுப்பிட்டி பகுதியில் தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்த பெண்

யாழில், சிறுப்பிட்டி யில் தேநீரை குடித்துவிட்டு தான் செய்த சிற்றுண்டியை அவரது கணவர் சாப்பிடவில்லை என்ற காரணத்தாலும், கணவர் தாக்கியதாலும் மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.அவரது கணவர் சனிக்கிழமை (18) வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது அவரது மனைவி தேநீரும் ரோல்ஸூம் கொடுத்துள்ளார்.
இதன்போது தேநீரை குடித்துவிட்டு ரோல்ஸினை சாப்பிட மறுத்துள்ளார். இந்நிலையில் அந்த ரோல்ஸினை சாப்பிடுமாறு கணவரிடம் வற்புறுத்தியுள்ளார்.
இதன்போது கணவர் அவரை தாக்கிவிட்டு வெளியே சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்துள்ளார்.
இதன்போது குறித்த பெண் ஏற்கனவே தனது உடலில் பெற்றோலினை ஊற்றிவிட்டு இருந்துள்ளார். கணவன் வந்ததும் தனக்கு தானே தீமூட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இந்நிலையில் அவரை மீட்டு கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (19) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html