யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், அதிவேகம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் மதிலுடன் மோதியுள்ளது.
விபத்தில் சிக்கிய 22 மற்றும் 24 வயதுடைய கரவெட்டி வடக்கைச் சேர்ந்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
கோப்பாய் பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கோப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் கரவெட்டியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நண்பர்களின் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக